சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சிகள்
தஞ்சாவூர், ஆக.16 - நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தையொட்டி வெள்ளியன்று (ஆக.15) மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் உட்பட பல்வேறு இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் (பொ) இளமதியன் தேசியக் கொடியேற்றி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இரா. முத்து கிருஷ்ணன் தலைமை வகித்தார். கி.கிருஷ்ண மூர்த்தி மாணவர்களுக்கு பேனா, நோட் புக், இனிப்பு வழங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர் சூரியா நன்றி கூறினார். பேராவூரணி அருகே உள்ள சித்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மூன்று மதிப் பெண்கள் பெற்ற மாணாக்கர்களுக்கு கேடயமும், கல்வி ஊக்கத்தொகையையும் சித்துக்காடு வளர்ச்சி சம நீதி அமைப்பு சார்பில், திருச்சிற்றம் பலம் காவல் ஆய்வாளர் அலாவுதீன் வழங்கினார். தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரையும் சித்துக்காடு கிராமத்தினரும், சித்துக்காடு வளர்ச்சி சம நீதி அமைப்பினரும் பாராட்டினர். பாபநாசம் சுதந்திர தினத்தையொட்டி, பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் தேசியக் கொடியேற்றப்பட்டது. பாப நாசம் பெனிபிட் பண்ட் வளாகத்தில் தேசியக் கொடியை தலைவர் ஜெகதீசன் ஏற்றினார். இதில் செயலர் சிக்கந்தர், பொருளாளர் கணேசன், வட்டாரத் தலைவர் முத்தமிழ் செல்வம், மாவட்டத் தலைவர் ஆறுமுகம், முன்னாள் தலைவர்கள் செங்குட்டுவன், பாண்டியன் உட்பட பலர் பங்கேற் றனர். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் அலுவல கத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலா ளர் பாதுஷா, தேசியக் கொடியை ஏற்றினார். இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவி பூங்குழலி, சட்ட மன்ற உறுப்பினரின் நேர்முக உதவியாளர் முஹ மது ரிபாயி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசியக் கொடியேற்றப் பட்டது. பள்ளி அறங்காவலர் ஜெயராமன் தலைமை வகித்தார். தலைமைச் செயலர் வரதராஜன், பள்ளி செயலர் கலியமூர்த்தி, நிதிச் செயலர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி முதல்வர் தீபக் வரவேற்றார். அறங்காவலர் ராஜேந் திரன் தேசியக் கொடியேற்றி, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் தேசியக் கொடியை நீதிபதி ஜெய்கணேஷ் ஏற்றினார். பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசியக் கொடியை லோடு மேன் வியாகுல சாமி ஏற்றி னார். பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெகதீசன் ஏற்றினார். பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் தேசியக் கொடியை தாசில் தார் பழனிவேலு ஏற்றினார். பாபநாசம் வேலுநாச்சியார் லயன்ஸ் சங்கம் சார்பில் முன்னாள் ராணுவ வீரர்கள் கெளரவிக்கப் பட்டனர். பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள் 20 பேர் கெளரவிக்கப் பட்டனர். தில் பாபநாசம் டி.எஸ்.பி பழனிவேலு, லயன்ஸ் கிளப் தலைவி தில்லை நாயகி, செயலர் பத்மதர்ஷினி, நிர்வாகிகள் டாக்டர் மோகனப்பிரியா, ரசிதா, ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர். பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் தேசிய கொடி யேற்றப்பட்டது. பாபநாசம் ரோட்டரி சங்க கட்டடத் தில் தலைவர் முருகவேல் தேசிய கொடியை ஏற்றி னார். செயலர் முகமது அப்துல் காதர், பொருளா ளர் விக்னேஸ்வரன், உதவி ஆளுநர் பக்ருதீன், முன்னாள் தலைவர்கள் செந்தில் நாதன், அறி வழகன் உட்பட பலர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம், சாய் விளையாட்டு மைதானத்தில் (ராஜன் தோட்டம்) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ்.ஸ்ரீகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 317 அரசு அலுவலர்களுக்கும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 40 காவலர்களுக் கும் என மொத்தம் 357 அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில், சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மை தானத்தில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச் சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சமாதானப் பறவையை பறக்க விட்டார். சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகா தாரத் துறை, மருத்துவத் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை சார்ந்த 70 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 39 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குடவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூ ராட்சி தலைவர் மகாலட்சுமி முருகேசன் தேசிய கொடி ஏற்றினார். பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆதிகாலத்து அலங்கார மாளிகையில் நடைபெற்ற விழாவில், 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்ட சிறப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆதிகாலத்து அலங்கார மாளிகை நிர்வாக மேலாளர் வீரையா வரவேற்றார். பொன்னமராவதி சிவன் கோயில் அருகில் துவங்கிய ஊர்வலம் பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியாக வந்து, ஆதிகாலத்து அலங்கார மாளி கையில் நிறைவுற்றது. ஊர்வலத்தில் மிகப்பிர மாண்டமான தேசிய கொடியை ஏந்தி வந்தனர். அரியலூர் அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, 53 பயனாளிளுக்கு ரூ.2.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார். ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கோதண்ட பாணி தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் இராதாகிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். சிபிஎம் அலுவலகங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலைமை வகித்து, தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கலைமணி, பா.சுகதேவ், மூத்த தோழர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் மகாத்மா காந்தி உருவப் படத்திற்கு மாலை அணி வித்து சுதந்திர தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் எஸ்.ராமசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.இ.ஜாகீர் உசேன், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.பிரேமா, கட்டுமான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பி. ஜோதிபாசு, கட்சியின் மாவட்ட அலுவலக பொறுப் பாளர் எம்.கலைமணி உள்ளிட்டோர் பங்கேற்ற னர். நன்னிலம் ஒன்றியம், பூந்தோட்டம் பள்ளிவாச லில் சுதந்திர தின கொடியேற்றப்பட்டது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சீனி.மணி சுதந்திர தின உரையாற்றினார். தஞ்சாவூரில் கணபதி நகர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினத்தையொட்டி மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா தேசியக் கொடி யையும், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டி யன் கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்தனர். மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன் சுதந்திர தின உரையாற்றினார். மூத்த தலைவர்கள் என்.சீனிவாசன், கோ. நீலமேகம், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாணவர், வாலிபர் சங்கத்தினர் உட்பட மாநகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒன்றியச் செயலா ளர் எஸ்.கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றினார்.