அரசு ஊழியர்களிடம் அதிகாரிகளின் மிரட்டல், அவமதிப்பு அதிகரிப்பு
திருப்பூர், செப்.7 - தமிழ்நாட்டில் பல்வேறு துறை வாரி சங்க அரசு ஊழியர்களிடம், உயர் அதிகாரிகளின் மிரட்டல், அவமரியாதை, அவமதிப்பு அதிக ரித்து வருகிறது. இதற்கெதிரான போராட்டத்தை தீவிரப்படுத்து வோம் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மு. சீனிவாசன் எச்சரித்தார். திருப்பூரில் வெள்ளியன்று மாநில பிரதிநிதித்துவப் பேரவை நடத்துவதற்கான வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மு.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நவம்பர் 8ஆம் தேதி மாநில பிரதி நிதித்துவப் பேரவையை திருப்பூரில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய் வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும். ஐந்து லட்சம் காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். சத் துணவு அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொகுப்பூதி யம், மதிப்பூதியம் அடிப்படையில் வேலை செய்வதற்கு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் உள் ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த பேரவையில் தீர்மா னம் நிறைவேற்றப்படும். குறிப்பாக திமுக 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அரசு ஊழியர்களின் மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து வாக்குறுதி அளித்ததுடன், திமுகவின் தேர்தல் அறிக்கையில் 309 முதல் 318 வரை இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்திரவாதம் அளித்துள்ளனர். எனினும் கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் இவற்றை நிறைவேற்றவில்லை. அத்துடன் ஓய்வூதியம் குறித்து ஒரு குழு அமைத்து கருத்து கேட்பு நடத்துகின்றனர். ஓய்வூதியக் குழு வின் காலக்கெடு செப்டம்பர் 30 என்று நிர்ணயித்துள்ளதை கால நீட்டிப்பு செய்யக்கூடாது. அந்த ஓய்வூதியக் குழுவின் பரிந்துரையை பெற்று அதை தாமதிக்காமல் வெளியிட வேண்டும். இது தவிர, தற்சமயம் பல் வேறு அரசுத் துறைகளில், துறை வாரி சங்கங்களை, ஊழியர்களை அதிகாரிகள் மிகவும் தரக்குறை வாக பேசுவது, அவமதிப்பது, அச் சுறுத்துவது அதிகரித்து வருகி றது. சமீபத்தில் திண்டிவனம் நக ராட்சியில் நகராட்சி ஊழியரை கவுன்சிலரின் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க செய்த இழிவான சம்பவம் நடைபெற்றுள்ளது. இது போன்ற அச்சுறுத்தும் அவமரி யாதை செய்யும் அதிகாரிகளின் போக்குக்கு எதிராகவும் மாநில பிர திநிதித்துவப் பேரவையில் விவா தித்து போராட்டம் நடவடிக்கைக்கு திட்டமிடுவோம். அரசு ஊழியர்களின் கோரிக் கைகளுக்காக, அவர்களது நலன்க ளுக்காக எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை பயன்படுத்தி, எங்கள் போராட்டத்தை வசப்படுத்த நினைக்கும் முந்தைய ஆட்சியா ளர்கள் மற்றும், மக்கள் மத்தியில் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் முயற்சியை அனுமதிக்க மாட் டோம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மக்கள் ஒற்றுமையை பாது காக்கவும், ஜனநாயகத்தை பாது காக்கவும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காகவும் எவ்வித சமரசமும் இல்லாமல் போராடு வோம். 16ஆவது மாநில பிரதிநிதித் துவப் பேரவையில், மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட 750க்கும் மேற் பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். இதில் மேலே சொன்ன பிரச்சனை களின் மீது விவாதித்து போராட்ட நடவடிக்கைகளுக்கு திட்டமிடு வோம் என்றார்.