பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடித் தீர்வு
நாமக்கல், ஆக.29- உங்களுடன் ஸ்டாலின் முகாமில், பொது மக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்படுள்ளதாக, திருச்செங்கோடு நகர் மன்றத் தலைவர் நளினி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர்மன்ற சாதாரண கூட்டம், நகர்மன்ற கூட்டரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த், துணைத்தலைவர் கார்த்தி கேயன், பொறியாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், பொதுமக்களின் குறைகளை நேரடியாக தீர்த்து வைக்க உங்களுடன் ஸ்டாலின் முகாம் அமைத்துக் கொடுத்த தமிழக முதல் வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரி வித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாம் 11 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு, தற் போது ஆறு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாமில், சொத்துவரி, குடிநீர் கட்டணம், பெயர் மாற்றம் உள்ளிட்ட 148 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் உட னடி தீர்வு காணப்பட்டுள்ளது. தெருவிளக்கு சாக்கடை வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 59 மனுக்கள் மீது அரசின் வழி காட்டுதல்படி தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என நகர்மன்றத் தலைவர் நளினி தெரி வித்தார். தொடர்ந்து, பல்வேறு நலத்திட்டங் கள் குறித்து 58 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, நகராட்சி ஆணை யர் பிரேம் ஆனந்த் பேசுகையில், நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளிலுள்ள காலியிடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் குறைந்தபட்சம் 5 மரக்கன்று களை நடவு செய்ய வேண்டும். அதை ஒரு சிறு விழாவாக நடத்தி சமூக காடுகள் வளர்க் கும் திட்டத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள் ளார். அதன்படி அனைத்து நகர்மன்ற உறுப்பி னர்களும் இன்றிலிருந்து இப்பணியை மேற் கொள்ள வேண்டும், என்றார்.