ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்திற்கு பெரும் ஆதரவு
தருமபுரி, ஜூலை 5- ஒன்றிய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ள ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு பல் வேறு சங்கத்தினர் ஆதரவு தெரி வித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழி யர் சங்கத்தின் தருமபுரி மண்டல பொதுக்குழு கூட்டம், தருமபுரியில் சனியன்று நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு மண்டலத் தலைவர் ஜெய ராமன் தலைமை வகித்தார். மாநி லப் பொருளாளர் நந்தகுமார், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சின்ன சாமி, மண்டலச் செயலாளர் சக்தி, பொருளாளர் சங்கர், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன், மாவட்ட இணைச்செயலா ளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மேட் டூர் அணை அரசு மீன் பண்ணையில் பணியாளர்களை எட்டு மணி நேரத் திற்கு மேல் பணிபுரிய கட்டாயப்படுத் தக்கூடாது. துறை மறு சீரமைப்பில் தருமபுரி மண்டலத்தில் பணியி டத்தை குறைக்கக்கூடாது என வலியு றுத்தி மாநில மையத்துடன் இணைந்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் படுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், ஜூலை 9 ஆம் தேதியன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் மீன்துறை ஊழியர்கள் அனைவரும் பங்கேற்பது, எனவும் முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று, தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தின் களப்பணியாளர்கள் மாநில ஒருங் கிணைப்புகுழு கூட்டம், சிஐடியு தரும புரி மாவட்டக்குழு அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை தலைமை வகித்தார். மாநில நிர்வாகி காந்திமதி வரவேற்றார். அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன் துவக்கவுரையாற்றி னார். மாநில பொதுச்செயலாளர் க. துரைசிங், மாநிலத் தலைவர் த.ரவி, பொருளாளர் முருகானந்தம், மாநி லச் செயலாளர்கள் ஆறுமுகம், வெற்றிவேல், துணைத் தலைவர் கள் மலர்விழி, அகஸ்தீயன், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே. புகழேந்தி, சத்துணவு ஓய்வூதியர் சங்க தலைவர் சி.அங்கம்மாள் உட் பட பலர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில், பெண்கள் முழுமையாக பணியாற்றும் சமூகநலத் துறையில் கவுன்சிலிங் முறையில் பணி மாறு தல் வழங்க வேண்டும். களப் பணியா ளர்களுக்கு பணிப்பாதுகாப்பு, பயணப் படி வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஜூலை 9 இல் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற் பது என முடிவு செய்யப்பட்டது.