tamilnadu

img

எப்படி மீள்வோம்… தையல் கலைஞர்கள் வேதனை

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து  சமீபகாலமாக ஒரு சில தளர்வுகள் கொண்டு  வரப்பட்டதால் தொழிலாளர்களில் சிலர் தற்போது மீண்டும் தங்களது அன்றாட  பணிகளுக்கு திரும்பியுள்ளனர். இதில் தையல் கலைஞர்களும் அடங்குவர். கொரோனா ஊர டங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் இவர்களும் ஒருவர். சாதாரணமாக ஒரு திரு மணம் என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வரும் இவர்கள் தற்போது முகக் கவசம் தைப்பவர்களாக மாறியுள்ளனர். இக் கலைஞர்களில் சிலரை சந்தித்து உரையாடிய போது கூறியதாவது... திக்குமுக்காடித்தான் போனோம்  20 வருடங்களாக கடை வைத்து  துணி தைத்து வரும் சரண்யா என்பவர் கூறுகையில், ஆரம்பத்தில் 18 ரூபாய்க்கு ஒரு  ஜாக்கெட் தைப்பதில் ஆரம்பித்தேன். தற்போது ஜாக்கெட்டை பொறுத்து 500 ரூபாய் வரை  வாங்குகிறேன். கொரோனா ஊரடங்கு பலதொழில் களை  புரட் டிப் போட் டதுபோல், தையல் தொழிலை யும் ஒரு கை பார்த்து  விட்டது. எங்களைப் போன் றோரைப் பொறுத்தவரை ஒரு மாதத்தில் உள்ள சுப நாட்கள் தான் எங்கள் மாத வருமா னத்தைத் தீர்மானிக்கும். தற்போதைய ஊரடங்கில் அவை அனைத்தும் தடை  செய்யப்பட்டதால் உண்மையில் திக்குமுக் காடித் தான் போனோம்.

 அனைத்தையும் விட சமாளிக்க முடியாத பிரச்சனையாய் இருந்தது கடை வாடகை தான்.  என் கடையின் உரிமையாளர் பாதி வாட கையைக் கொடுத்தால் போதும் என  அறிவுறுத்தியதால் நான் ஓரளவு தப்பித்தேன். ஆனால் எல்லோரும் அதுபோல் இல்லை. சொல்லப் போனால் தற்போதைய நிலை யில் கறாராக வாடகையை வாங்குகின்றனர். இதுதவிர வங்கித் தவணை வட்டிக்கு, வட்டி போடும் நிலையும் தொடர்கிறது. அரசு தரப்பில் ஒருசில பயனளிக்கக்கூடிய நடவடிக் கைகளாவது மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஒரு நிவாரணமும் இல்லை 15 வருடங்களாக தையல் தொழில் செய்து  வரும் சிவசாமி என்பவர் கூறுகையில், கொரோ னா ஊரடங்கால் சுத்தமாக வேலை இழந்து தற் போது கிடைக்கும் வேலையைச் செய்து வருகி றேன். தற் போது வீட் டில் கடை தான் வைத்  துள்ளேன். . இதற்கு முன் கொஞ்சம் வெளியே நகரத்தில் கடை வைத்திருந்தேன். வாடகை கொடுக்க இயலாததால் தற்போது தான் இடமாற்றம் செய்தேன்.

ஒரு  நகர்ப்புறத்தில் தையல் கடை நடத்துவது ஒன்றும் சாதாரணமான விஷயம் இல்லை. வருமானம் உண்டோ, இல்லையோ கடை வாடகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்தித்தான் ஆக வேண்டும். எனவே, இடம் மாற்றிய தால் அதிலிருந்து தப்பி விட்டோம். அரசைப் பொறுத்தவரை தையல் கலைஞர் களுக்கென ஒரு நிவாரணமும் வழங்கி யதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தா லும் எங்கள் கைகளுக்கு இதுவரை வந்ததில்லை, என வேதனை தெரிவிக்கிறார். எப்படி மீளுவோம் ... கடந்த 20 வருடங்களாக தையல் கடை  நடத்தி வரும் ராஜா என்பவர் கூறுகையில், தற்போது மட்டுமல்ல கடந்த சில காலமாகவே தையல் தொழிலில் பெரிய முன்னேற்றம் எதுவு மில்லை. எனக்கு மனைவியும், இரு குழந்தை கள் இருக்கும் நிலையில் நான் மட்டும் தான் குடும்பத்தின் பொருளாதாரம். தற்போது கொரோனா ஊரடங்கால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளேன். மேலும், தற்போது மக்க ளின் வாங்கும் சக்தி கொரோனா ஊரடங்கால் பெரிதும் குறைந்துள்ளது.

அதோடு தற்போது துணி தைப்பதற்குரிய காரணங்களான திரு மணமோ அல்லது வேறெந்த சுபநிகழ்ச்சி களோ அனைத்தும் இல்லாமல் போனதால் மக்கள் தங் ்களுக்கு துணி தைத்துக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணமே இல்லாமல் போய்விட்டது. ஆக, இதன்பின்னர் நாங்கள் எப்படி மீளுவோம் என்றே தெரியவில்லை என்கிறார். பள்ளிச் சீருடை ஆர்டரும் போச்சு...  ஒரு தையல் கடையில் 4 வருடங்களாக பணி புரிந்து வரும் சங்கீதா என்பவர் கூறுகையில்,  கொரோனாவிற்கு முன்னதாக அதிகளவு ரெடிமேட் துணிகள் பிரபலமானதால் தைப்பவர் கள் அதிகளவு பாதிக்கப்பட்டார்கள். அதிலே அடிபட்டு சிறிது மீண்டு வருவதற்குள் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊர டங்கிற்கு பின் தற்போது ஒரு வாரத்தில் ஓரிரு  நாட்கள் தான் வேலை உள்ளது. மேலும், இக் காலத்தில் தான் பள்ளிச் சீருடை ஆர்டர்கள் நிறைய வரும். பள்ளிகளும் இப்போது மூடப்பட் டுள்ளதால் அந்த நம்பிக்கையும் இல்லாமல் போய் விட்டது. சுருக்கமாகச் சொன்னால் முன்பு பெற்ற வருமானத்தில் பாதிக்கும் குறைவாகத் தான் தற்போது பெறுகிறோம்.  

அரசு நிவாரணம் அளித்தது என கூறிக் கொண்டாலும் உண்மையில் அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் ஒரு சிலிண்டருக்கே சரியாக இருக்கிறது. எனவே, அரசைப் பற்றியோ அதன் உதவிகளைப் பற்றியோ சொல்ல எதுவு மில்லை. எங்கள் வாழ்க்கையை நாங்கள் தான்  பார்த்துக் கொள்ள வேண்டும், என்கிறார். நிவாரண தொகையாவது  உயர்த்தியிருக்கலாம்... 30 வருடங்களாக தையல் கடை நடத்தி  வரும் சஜாத் அகமது என்பவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் கடை உரிமையாள ரான நானும், என்னிடம் பணிபுரிபுவர்களும் அதி களவு பாதிக்கப்பட்டோம் இருப்பினும் கிடைத்த ஆர்டர் மற்றும் சேமிப்பை வைத்து நாங்கள் ஓர ளவு சமாளித்துக் கொண்டோம். நாங்கள் பெரு மளவு டெக்ஸ்டைல் மற்றும் திருமண ஆர்டர் களைத்தான் நம்பியுள்ளோம். தற் போதைய சூழ்நிலையில் திருமண நிகழ்வு களும் சரி, டெக்ஸ்டைல்ஸ் மில்களும் சரி, இரண்டும் தடை செய்யப்பட்டுள்ளதால் பெரி தாக எதுவும் கை கொடுக்கவில்லை. அரசா வது நிவாரண தொகையை சற்று உயர்த்தி வழங்கி கிருக்கலாம் என வேதனை யுடன் தெரி விக்கிறார்.சுபதினங் கள் என் றாலே புதுத்துணிகளைத் தேடுபவர்களை விட  கச்சித மாகத் தைப்பவர்களைத் தான் பெரும் பாலோனோர் தேடுவர். ஆனால், தற்போதைய சூழலில் ஆளும் அரசுகளும், புது துணி வாங்கும் சக்தியை இழந்த மக்களும் இவர் களை முற்றிலுமாக மறந்துவிட்ட நிலையில் ரேசன் அரிசியையும், கடனையும் நம்பியே தங்களது வாழ்வை நகர்த்தி வரு கின்றனர். இவர்களின் குரல்களை அரசு  கொஞ்சமேனும் காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பா கும்.

ச.காவியா.