tamilnadu

img

வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான காவல் நிலையம் இனி குழந்தைகள் பராமரிப்பு மையமாக செயல்படும்

வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான காவல் நிலையம் இனி

நீலகிரி, செப்.2- 200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரிக்கு வந்த  ஜான் சல்லிவன் போன்ற ஆங்கிலேயர்களால், நவீன உதகை நகர் உருவாக்கப்பட்டது. அவர்கள் கட்டிய முதல் கல் பங்களா ‘ஸ்டோன் ஹவுஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதுவே, நவீன உதகையின் தொடக்கப் புள்ளி. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 1850-களில் உதகை  நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு சிறிய  குன்றின் மீது ஒரு காவல் நிலையத்தைக் கட்டத்  திட்டமிட்டு, 1850-ம் ஆண்டில் கட்டி முடிக்கப் பட்டது. இது 1860-ம் ஆண்டு முதல் முறையாகச்  செயல்படத் தொடங்கியது. இதுவே, உதகை யின் முதல் காவல் நிலையம் ஆகும். இந்தக் காவல் நிலையம் பல வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்துள்ளது. குறிப் பாக, 1900-ம் ஆண்டின் தொடக்கத்தில், கேரளா வில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த ‘மாப்ளா ரெபெல்ஸ்’ என்ற புரட்சிக் குழுவினரின் தாக்குத லுக்கு 1921-ம் ஆண்டில் இது உள்ளானது. அந்தத்  தாக்குதலில், ஓர் ஆய்வாளர், ஓர் உதவி ஆய்வா ளர், மற்றும் இரண்டு காவலர்கள் என மொத்தம்  நான்கு பேர் கொல்லப்பட்டனர். காலப்போக்கில், இந்த பழைய கட்டடத்தை  இடித்துவிட்டுப் புதிய கட்டடம் கட்ட 2005-ம்  ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அதன்  வரலாற்று முக்கியத்துவம் காரணமாக இத்திட் டத்துக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மக்க ளின் கோரிக்கையை ஏற்று, அதே இடத்தில், பழைய கட்டடத்துக்கு அருகிலேயே ஒரு புதிய  கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. 2016-ம்  ஆண்டு முதல், இந்தப் புதிய கட்டடத்திலிருந்து உதகை பி1 காவல் நிலையம் செயல்பட்டு வருகி றது. பழைய பாரம்பரியக் கட்டடத்தைக் காவல் துறை வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றப்ப டும் என அறிவிக்கப்பட்டாலும், அது நடை முறைக்கு வரவில்லை. இந்நிலையில், காவல்து றையினரின் குழந்தைகளைப் பராமரிக்கும் மையமாக அதை மாற்றும் முடிவு எடுக்கப்பட் டது. கடந்த ஓராண்டாக, இதற்கான பணிகள் முழு  வீச்சில் நடந்து வருகின்றன. இந்தப் பழமையான கட்டடம், இப்போது குழந்தைகளைக் கவரும் வகையில், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்களின் வண்ணமயமான ஓவியங் களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. சுமார்  175 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டடம்  இன்றும் உறுதியுடனும் வலுவுடனும் இருப்பது, இதன் சிறப்பான கட்டுமானத்திற்குச் சான்றாக உள்ளது. விரைவில், இந்தக் குழந்தைகள் பரா மரிப்பு மையம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.