tamilnadu

img

மலைவாழ் மக்கள் சங்க பென்னாகரம் மாநாடு

மலைவாழ் மக்கள் சங்க பென்னாகரம் மாநாடு

தருமபுரி, ஆக.26- மலைவாழ் மக்கள் சங்க பென்னாகரம் வட்ட மாநாட் டில் நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்ட 3 ஆவது மாநாடு, பென் னாகரத்தில் சங்கத்தின் வட்டத் தலைவர் செல்வம் தலைமையில் செவ்வாயன்று நடை பெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆ.ஜீவானந்தம் துவக்கவுரை யாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் குமார், துணைச்செயலாளர் கே. அன்பு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட் டப் பொருளாளர் எம்.பி.முருகன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசி னர். இம்மாநாட்டில், பென்னாகரம் பகுதியி லுள்ள இருளர் பழங்குடினருக்கு வன மக சூல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். வன  உரிமை சட்டத்தின்படி, நிலம் மற்றும் பட்டா வழங்க வேண்டும். இனச்சான்று கேட்டு விண் ணப்பித்தவர்களுக்கு உடனடியாக சான்றி தழ் வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொ டர்ந்து, சங்கத்தின் வட்டத் தலைவராக செல் வம், செயலாளராக சண்முகம், பொருளாள ராக மாரிமுத்து உட்பட 13 பேர் கொண்ட வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. சங்கத் தின் மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லை யன் நிறைவுரையாற்றினார்.