கைத்தறி தினமும்; கைத்தறி தொழிலாளி நிலையும்!
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி கைத்தறி தினமாக அரசு கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினம், கைத்தறி தொழிலில் உள்ள கைத்தறி நெச வாளர் சங்கங்களே 7ஆம் தேதி, மூத்த நெசவாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்குவது என்ற நிகழ்ச் சியை நடத்துகிறது. கைத்தறி தொழிலை நம்பி உள்ள நெசவாளர் கள் வாழ்வு வேட்டியை இலவசமாக பெறக்கூடிய அவல நிலைக்கு தள் ளப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 115 கைத் தறி நெசவாளர் சங்கங்கள் உள் ளன. சில நெசவாளர் சங்கங்கள் தவிர பெரும்பான்மையான நெசவா ளர் சங்கங்கள் லெட்டர் பேடு சங் கங்களாகவும் ரிபேட்டை (தள்ளுபடி மானியம்) பெற கணக்கு எழுதும் வேலையை மட்டும் செய்து வரு வதை காண முடியும். கைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்கப் படும் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு, 60 வயது முதிர்ந்த கைத் தறி தொழிலாளர்களுக்கு முதி யோர் ஓய்வூதியம் என்பது கானல் நீர் ஆகிவிட்டது. குழு காப்பீடு என்பது அறவே இல்லை. தனியார் துறையில் ஜவுளி உற் பத்தியாளர்களிடம் நெசவு நெய்யும் தொழிலாளர்களின் அவல நிலை சொல்லி சொல்லி மாளாது. ஜவுளி உற்பத்தியாளர்களின் லாபம் மட் டும் குறையாமல் பார்த்துக் கொண்டு இரண்டு வாரத்திற்கு இரண்டு சேலை மட்டும் பாவு கொடுப்பது, அதை செய்து முடித்த பிறகு ரூ.2400 கூலி பெற்ற பிறகு, மீண் டும் 15 நாட்கள் கழித்து தான் ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு வழங்கு வார்கள். வேலையில்லாத காலத் தில் பெருமளவு தொழிலாளர்கள் கட்டிட வேலைக்கு, பனியன் சார்பு தொழிலுக்கும் மளிகை கடை களில் பொட்டலம் போடும் வேலை களுக்கு செல்லும் நிலை, தனியார் செக்யூரிட்டி கார்டாக செல்வதும் நடந்து வருகிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக கூலி உயர்வு என்பது இல்லாத தொழிலாகவும், வேலை செய்வ தற்கு தயாராக இருந்தும் பாவு, நூல் இல்லாத நிலைமையில் கைத்தறி தொழிலாளர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பலரும், கடன் வலையில் சிக்கி, பல வீடுகள் ஏலம் விடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கைத் தறி தொழிலுக்கு ஒதுக்கப்பட்ட 22 ரகம் என்று இருந்தது, 11 ரகமாக சுருங்கியுள்ளது. 11 ரகங்களும் முழு மையாக அமலாகாத நிலை உள் ளது. அரசு அதிகாரிகளின் அலட்சி யத்தால் முழுமையாக அமலாக்க முடியாமல் இருக்கிறது. அரசே, ஆண்டுதோறும் வழங் கும் இலவச வேட்டி சேலை திட்ட மும் விசைத்தறியில் கொடுத்து உற் பத்தி செய்து விநியோகம் செய்யும் நிலை தற்போது நடந்து வருகிறது. 10 சதவிகித கூலி உயர்வு என்று அறிவிப்பு அமலாகாத நிலை பல கூட்டுறவு சங்கங்களில் உள்ளதை காண முடியும். எனவே, கைத்தறி தினத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு 11 ரக ஒதுக்கீடடை முறையாக அமலாக்கு வதும், கூலி உயர்வும், சமூகப் பாது காப்பு திட்டங்கள் முழுமையாக அம லாக்கப்படுவதும் என்பதே கைத் தறி தினத்தை, கைத்தறி தொழிலா ளர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் தினமாக அமையும் என்று தொழிலா ளர்கள் எதிர்பார்க்கின்றனர்.