tamilnadu

img

குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கப் பேரவை

குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கப் பேரவை

தருமபுரி, ஆக.20- குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க பேரவைக் கூட்டத் தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் - பாப்பிரெட்டிப்பட்டி குரு மன்ஸ் பழங்குடி மக்கள் சங்க வட்டப் பேரவை கூட்டம்,  பாப்பிரெட்டிப்பட்டியில் நிர்வாகி நாகேந்திரன் தலைமை யில் புதனன்று நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்க மாநில துணைச்செயலாளர் ஏ.கண்ணகி, மாவட் டச் செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்டத் தலை வர் ஏ.அம்புரோஸ், மாவட்ட துணைத்தலைவர் சி. சொக் கலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். இக்கூட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டியை மையப்ப டுத்தி அரசு ஏகலைவா பள்ளி துவங்க வேண்டும். குரு மன்ஸ் பழங்குடி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர் களின் மனுவை பரிசீலனை செய்து, சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குருமன்ஸ் பழங்குடி  மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் வட்டத் தலைவ ராக கே.நாகேந்திரன், செயலாளராக எஸ்.வெங்க டேசன், பொருளாளராக எஸ்.தமிழரசன் உட்பட 15 பேர்  கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.