அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
ஈரோடு, ஆக.19- இரண்டாவது நாளாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண் டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழி யர்களுக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழகம் முழு வதும் அரசு போக்குவரத்து ஊழி யர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் திங்க ளன்று தொடர் காத்திருப்புப் போராட் டத்தை தொடங்கிய நிலையில், இரண்டாவது நாளான செவ்வாயன் றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். ஈரோடு மண்டல அலுவலகம் முன்பு நடத்திய 2 ஆவது நாள் தொடர் காத்திருப்புப் போராட்டத் திற்கு மண்டலத் தலைவர் எஸ்.இளங்கோ தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப் ரமணியன், மாவட்டச் செயலாளர் எச். ஸ்ரீராம் மற்றும் பன்முக தலைவர் என். முருகையா ஆகியோர் போராட் டத்தை வாழ்த்தி பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். கோவை கோவை சுங்கம் பகுதியில் உள்ள அரசு பேருந்து பணிமனை முன்பு கோவை அரசு போக்குவரத்து ஊழி யர்கள் சங்கம் (சிஐடியு) மண்டலத் தலைவர் லட்சுமிநாராயணன் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் மண்டல பொதுச்செயலாளர் வேளாங்கண்ணிராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம் மேளனம் மாநில துணை பொதுச் செயலாளர் கனகராஜ், சிஐடியு மாவட்டப் பொருளாளர் வேலுச்சாமி, ஓய்வூதியர்கள் நலச்சங்க ஒருங் கிணைப்பாளர் அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி தருமபுரி போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு, சங்கத்தின் மண்டலத் தலைவர் எஸ். சண்முகம் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. நாகராசன், மண்டல துணைத்தலைவர் சி. முரளி, பொரு ளாளர் என். மயில்சாமி, ஓய்வு பெற் றோர் நல அமைப்பின் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. ஜீவா உள் ளிட்ட தலைவர்கள் வாழ்த்தி பேசி னர்.