tamilnadu

img

காவல்துறையை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காவல்துறையை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 14- அரசு ஊழியர்களை தாக்கிய காவல்துறையினரின் அரஜாக நட வடிக்கையை கண்டித்து தமிழகம்  முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தி னர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் விருதுநகர் சங்க கட்டடத்தில்  சங்க பணி மேற்கொண்டிருந்த  மாநில பொதுச் செயலாளர் சீனிவா சன் உள்ளிட்ட நிர்வாகிகளை, காவல்துறையினர் தாக்கி அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் ராமர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒருபகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க செயலாளர் மாவட்டச் செயலாளர் சுரேஷ், தலைவர் ந.திருவேரங்கன் பொரு ளாளர் சண்முகம் வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநில  துணைத்தலைவர் வெ.அர்த்த னாரி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். ஈரோடு இதேபோன்று, ஈரோடு வட் டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அரசு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில், மாவட் டச் செயலாளர் ச.விஜயமனோக ரன், வட்டக்கிளை செயலாளர் சந் திரமௌலி, சத்துணவு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின்,  மாவட்டத் தலைவர் எம். சுருளி  நாதன் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் ஏ. தெய் வானை மாவட்டப் பொருளாளர்  அன்பழகன், சத்துணவு ஊழியர்  சங்க மாநில செயலாளர் தங்கராஜ்,  அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம். பெரு மாள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். கோவை  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெக நாதன் தலைமை ஏற்றார். இதில்,  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ப. செந்தில் குமார், தென் மண்டல  இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப் பின் துணைத் தலைவர் வி.சுரேஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.