சுற்றுலாப் பயணிகளை கவரும் ‘ஜெரோனியம்’
உதகை, அக்.4- உதகை அருகே உள்ள கர்நாடகா பூங்காவில் பல வண் ணங்களில் பூத்துள்ள ஜெரோனியம் மலர்கள் சுற்றுலாப் பய ணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள பெர்ன்ஹில் பகு தியில் கர்நாடகா மாநில தோட்டக்கலைத்துறைக்கு சொந்த மான பூங்கா உள்ளது. இந்த பூங்காவில், பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண் டாம் சீசன் என்பதால், இங்குள்ள பசுமை குடிலில் பல்வேறு வகையான மலர் செடிகள் தொட்டிகளில் அலங்கரித்து வைக் கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த பசுமை குடிலில் பல வண்ணங்களை கொண்ட ஜெரோனியம் மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது சிவப்பு, வெள்ளை, ஊதா உள்ளிட்ட பல வண்ணங் களில் ஜெரோனியம் மலர்கள் பூத்துள்ளன. இதனை சுற்று லாப் பயணிகள் கண்டு ரசிப்பது மட்டுமின்றி, அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
கோவை, அக். 04: கோவை வேளாண் பல்கலையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அக்.5 மற்றும் 6 ஆகிய தேதி களில் நடைபெறவுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தின் (TNAU) அறுவடைக்குப் பின்சார் தொழில்நுட்ப மைய மும், வேளாண்மைப் பொறியியல் கல்லூரியும் இணைந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சியை அக்டோபர் 5 மற்றும் 6, 2025 தேதிகளில் நடத்த வுள்ளன. விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் உண வுப் பொருள் தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு இப்ப யிற்சி பயனளிக்கும். சத்துமாவு, பருப்புப் பொடி, சாம்பார் பொடி, இன்ஸ்டன்ட் அடை மிக்ஸ், ரசம் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ், பிரியாணி மசாலா, கரம் மசாலா, மீன் வறு வல் மசாலா, பிஸ்கெட், ஜாம் உள்ளிட்டவற்றின் தயாரிப்பு மற் றும் தொழில் தொடங்குவது குறித்த வழிகாட்டுதல் இதில் இடம்பெறும். பயிற்சிக் கட்டணம் ரூ.1,770 (ரூ.1,500 + 18% ஜி.எஸ்.டி). முதல் நாள் நேரில் செலுத்தி பதிவு செய்யலாம். பயிற்சி காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை, அறு வடைக்குப் பின்சார் தொழில்நுட்ப மையம், TNAU, கோவை - 641 003 இல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 94885 18268, 0422 6611340 எண்களில் தொடர்புகொள்ளலாம்.
குறைதீர் கூட்டம்
ஈரோடு, அக்.4- பெருந்துறை, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங் கள் அடங்கிய ஈரோடு கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்.10 ஆம் தேதியன்று ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெறவுள்ளது. கோட்டாட்சியர் தலைமை யில் நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாய நிலங்களை அள வீடு செய்தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஓடைக ளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற விவசாய கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் படும் என கோட்டாட்சியர் சிந்துஜா தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வு
ஈரோடு, அக். 4- தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணயத்தால் நடத்தப்பட்ட ஒருங்கி ணைந்த குடிமைப்பணிகள் தொகுதி (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) முதன்மை தேர்வில், தேர்ச்சி பெற்று பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ள 167 உதவியா ளர் பணியிடங்களுக்குான பணிநாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவ தற்காக 06.10.2025 அன்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு (Google Meet) நடத்தப்பட உள்ளது. எனவே, ஈரோடு மாவட் டத்தில் மேற்குறிப்பிட்ட தேர் வில் தேர்ச்சி பெற்ற பணி நாடுநர்கள் எவறேனும் இருப் பின், 06.10.2025 அன்று காலை 8.30 மணி அளவில் உரிய ஆவணங்களுடன் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவல கத்திற்கு வருகை புரிந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.