tamilnadu

img

ககன்யான் திட்டம் 85% நிறைவு - இஸ்ரோ தலைவர் பேட்டி

ககன்யான் திட்டம் 85% நிறைவு - இஸ்ரோ தலைவர் பேட்டி

கோவை, செப்.18- ககன்யான் திட்டத்தில் தற் போது 85% சோதனைகள் வெற்றிகர மாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். கோவையில் நடைபெற்ற தனி யார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வ தற்காக இஸ்ரோ தலைவர் நாராய ணன் விமானம் மூலம் வியாழ னன்று கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ககன்யான் திட்டத்தின் முன் னேற்றங்கள் குறித்து பேசுகையில், 2018 இல் அறிவிக்கப்பட்ட ககன் யான் திட்டத்தில் தற்போது 85% சோதனைகள் வெற்றிகரமாக நிறை வடைந்துள்ளது. இந்த ஆண்டு  டிசம்பரில் ஆளில்லா விண்ணூர் தியை அனுப்ப திட்டமிடப்பட்டு, அதில் ‘வயோமித்ரா’ என்ற எந்திர  மனிதர் (ஏஐ ரோபோ) பயன்படுத் தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, மேலும் இரண்டு ஆளில்லா ராக்கெட்டுகள் அனுப் பப்படவுள்ளது. 2027 மார்ச் மாதத் தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் உள்ளது.  ககன்யான் திட்டத்திற்காக பல் வேறு கட்ட சோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ராக் கெட்டில் விபத்து ஏற்பட்டால் விண் வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வருகி றது. இத்திட்டத்தில் இஸ்ரோ மட்டு மல்லாமல், விமானப்படை, கடற் படை உள்ளிட்ட பல அமைப்புக ளும் பங்கேற்கிறது. இந்தியாவின் விண்வெளி சாத னைகள் குறித்து பெருமிதத்துடன் பேசிய அவர், உலக அளவில் 9  துறைகளில் இந்தியா முதலிடத் தில் உள்ளது. நிலவில் பயன்படுத் தப்படும் கேமராக்களில் இந்தியா வின் கேமரா மிகச் சிறந்தது. ராக் கெட் இன்ஜினியரிங் துறையில்  பல சாதனைகளை படைத்துள்ளது என்றார். மேலும், விண்வெளி ஆராய்ச்சி யில் மாணவர்களின் ஆர்வம் குறித்து பேசிய நாராயணன், நாட்டில் 55% விண்ணப்பங்கள் பாமர மக்களிடமிருந்து வருகிறது. மாணவர்கள் விண்வெளி தொடர் பான துறைகளில் அதிக ஆர்வம்  காட்டுகின்றனர். ‘வயோமித்ரா’ எந் திர மனிதர் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வர். சந்திராயன்-4 திட்டத்தில் நில வில் மாதிரிகளை சேகரிக்க ஏஐ  ரோபோ தொழில்நுட்பம் பயன் படுத்தப்படவுள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கற்களை எட்டுவதற்கு இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருவதாகவும், இளைஞர்களின் பங்களிப்பு இதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் நாராயணன் நம்பிக்கை தெரிவித்தார்.