tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

40 சுய உதவிக்குழுக்களுக்கு நிதி வழங்கல்

உதகை, செப்.17- நீலகிரி மாவட்டத்தில் 40 சுய உதவிக்குழுக்களிலுள்ள 4294 உறுப்பினர்களுக்கு ரூ.42.63 கோடி நிதியும், 5000 மக ளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை யும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா, உதகை பழங்குடியினர் பண் பாட்டு மையத்தில் செவ்வாயன்று நடைபெற்றது.  இதில், மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் 204 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.22.23 கோடி, நகர்புற பகுதிகளில் 161 மகளிர்  சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.48.47 கோடி என மொத்தம் 368  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40.70 கோடி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கிளை களின் மூலம் கடன் வழங்கப்பட்டது. மேலும், சமுதாய முத லீட்டு நிதி 40 சுய உதவிக்குழுக்களிலுள்ள 80 பயனாளிக ளுக்கு ரூ.60 லட்சம் வழங்கப்பட்டது. சுய உதவி குழுக்களி லுள்ள பெண் தலைமையேற்று நடத்தும் தொழில் நிறுவனங் களுக்கான வங்கிக்கடனாக 141 நபர்களுக்கு ரூ.1.33 கோடி  வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 40 சுய உதவிக்குழுக்களி லுள்ள 4294 உறுப்பினர்களுக்கு ரூ.42.63 கோடி நிதி வழங்கப் பட்டது. முதற்கட்டமாக 5000 மகளிர் சுய உதவிக்குழு உறுப் பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ் வில், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட  ஆட்சியர் லட்சுமி பவ்யா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

மூதாட்டி தவறவிட்ட நகை திரும்ப ஒப்படைப்பு

ஈரோடு, செப்.17- அரசுப் பேருந்தில் மூதாட்டி தவறவிட்ட தங்க நகை அவரி டம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முருகன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (80). இவர் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தனது மகள்  வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு செல்வதற்காக தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் வழியாக செல்லும்  அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது பழங்கள் வைத் திருந்த பையுடன் 2 பவுன் நகை, ரூ.7,570 ரொக்கம் ஆகியவை  வைத்திருந்த பணப்பையையும் (பர்ஸ்) பேருந்தில் தவற  விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். பேருந்து, ஈரோடு  பேருந்து நிலையத்திற்கு சென்றபின் ஓட்டுநர் தேவேந்திரன், நடத்துநர் மாதேஷ் ஆகிய இருவரும் உணவருந்தும்போது இருக்கைக்கு அடியில் பாலித்தீன் பை இருந்ததை எடுத்து  பார்த்தபோது, அதில் நகை, பணம் இருப்பதை அறிந்து, அதை  சத்தியமங்கலம் பணிமனை மேலாளரிடம் ஒப்படைத்தனர். விசாரித்ததில், மூதாட்டி பழனியம்மாள் தான் இந்த பையை  தவறவிட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது முக வரியை விசாரித்து அவரை வரவழைத்து, சத்தியமங்கலம்  போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் மற்றும் சத்தியமங்க லம் போலீசார் முன்னிலையில் பழனியம்மாளிடம் நகை மற் றும் பணத்தை ஒப்படைத்தார். பணம், நகையை பாதுகாப்பாக  எடுத்து ஒப்படைத்த ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் மூதாட்டி  மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

ஈரோடு, செப்.17- கடம்பூர் அருகே யானை தாக்கி தொழி லாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதி யில் ஏலஞ்சியைச் சேர்ந்தவர் பிரபு (38). இவர்  அதேபகுதியிலுள்ள பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். தோட்டத்தில் வாழைகளை, யானைகளிடமிருந்து காப் பாற்ற பிரபு இரவு நேரத்தில் காவல் பணி மேற் கொள்வது வழக்கம். இந்நிலையில், செவ்வா யன்று இரவு வழக்கம் போல் தோட்டத்தில் காவலில் ஈடுபட்டபோது, நள்ளிரவு ஒற்றை  யானை வாழை தோட்டத்திற்குள் நுழைந்தது. உடனே அக்கம் பக்கத்து விவசாயிகளின் உதவியுடன் பிரபு விரட்ட முயன்றார். அப் போது திடீரென பிரபுவை யானை துரத்தி தும்பிக்கையால் தாக்கி காலால் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிரிழந் தார். இதுகுறித்து தகவலறிந்த கடம்பூர் வனத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து  பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி யினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.

உபகரணங்கள் வழங்கல் உதகை

, செப்.17- அடிக்கடி மழையும், குளிர்ச்சியும் நிலவும் நீலகிரி  மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் தங்கள்  கடமைகளை நிறைவேற்று வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந் நிலையில், சுகாதாரப் பணி யாளர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் பொருட்டும் தங் கள் அத்தியாவசிய சேவை களை தடையில்லாமல் தொடர உதவியாக, டாக்டர்  பி.சி.தாமஸ் அறக்கட்டளை சார்பில், ரெயின் கோர்ட்  மற்றும் கையுறைகள் வழங் கப்பட்டன. இவற்றை அறக் கட்டளை நிர்வாகிகள் அசோக் பிரசாத், உதிதா பிர சாத் ஆகியோர், நகராட்சி ஆணையர் கணேசனிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சி யில், சுகாதார அலுவலர் ஷிபி, சுகாதார ஆய்வாளர் வைரம் ஆகியோர் உடனி ருந்தனர்.