சரக்கு லாரி நடுவழியில் பழுதாகி நின்றதால் மூன்று மாநில போக்குவரத்து பாதிப்பு
உதகை, ஜூலை 14- கர்நாடகாவில் இருந்து நீலகிரி நாடுகாணி வழியாக கேரளாவிற்கு சென்ற 23 டன் எடை கொண்ட சரக்கு லாரி நடுவழியில் பழுதாகி நின்றதால், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மூன்று மாநில போக்குவரத்து முற்றி லுமாக பாதிக்கப்பட்டது. தமிழகம், கேரளம், கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதி யாக நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி அமைந்துள்ளது. கூடலூர் நாடுகாணி வழி யாக கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங் களுக்கு நாள்தோறும் ஏராளமான சரக்கு வாக னங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் திங்களன்று கர்நாடகாவில் இருந்து கூட லூர் நாடுகாணி வழியாக சென்ற 23 டன் எடை கொண்ட சரக்கு லாரியின் டயர் பஞ்சராகி நடு வழியில் நின்ற நிலையில் சக்கரம் மாற்றி யும் வாகனம் முற்றிலுமாக பழுதடைந்து நின் றதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக் கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவ குத்து நின்றதால் மூன்று மாநில போக்குவ ரத்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக பாதிக் கப்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணி கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மனு தாக்கல்
ஈரோடு, ஜூலை 14- ஈரோடு மாநகராட்சியில் நியமன உறுப்பினர் பத விக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மனு தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பின ராக மாற்றுத்திறனாளிகள் நியமனம் செய்யப்பட உள்ள னர். அதற்கான வேட்பு மனு விநியோகம் தொடங்கி யுள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதி வரும் 17 ஆகும். இந்நிலையில் ஈரோடு மாநகராட்சியில் நியமன உறுப்பினர் பதவிக்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக் கான சங்கத்தின் நகரத் தலைவர் எம்.ஆனந்தன் திங்க ளன்று மாநகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மாவட்டச் பொருளாளர் வி.ராஜு, நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.