பூக்களின் விலை கடும் உயர்வு
கோவை, ஆக.26 - விநாயகர் சதுர்த்தி மற் றும் ஓணம் ஆகிய விழாவை யொட்டி, பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. கோவை பூ மார்கெட்டில், மல்லியின் விலை ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 300 எனவும், முல்லை பூ ஒரு கிலோ ஆயி ரத்து 200 என விற்பனையா னது. விநாயகர் சதுர்த்தி புதனன்று கொண்டா டப்படுகிறது. அடுத்த வாரம் ஓணம் பெரு விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி, கோவை பூ மார்க்கெட்டில் பூ விற்பனை சூடு பிடித்தது. விலையும் அதிகரித்தே காணப்பட் டது. இதன்படி, மல்லிகை பூ கிலோ ரூ.2300, முல்லை ரூ.1200, ஜாதி மல்லி ரூ.800 முதல் ரூ.1000 ரூபாய், அரளி ரூ.400 முதல் ரூ.600, செவ்வந்தி ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், சம்மங்கி ரூ.400க்கும் என விற்பனை செய் யப்பட்டது. இதேபோல் எருக்கம்பூ மாலை ஒன்றின் விலை ரூ.50க்கு விற்பனையானது. தென்னங்குருத்தால் செய்யப்பட்ட அலங் கார தோரணங்கள் ரூ.20 ரூபாய் முதல் விற் பனை செய்யப்பட்டது. இதேபோல, மாலை வகைகளும் வழக்கத்தை காட்டிலும் அதி கரித்து காணப்பட்டது. விலை கடுமையாக அதிகரித்தே காணப்பட்ட நிலையிலும், ஏராள மான மக்கள் பூ மார்க்கெட்டில் குவிந்தனர்.