tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ராயல்கேர் மருத்துவமனையில் முதல்  இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

கோவை, ஆக. 27- கோவை ராயல்கேர் மருத்துவமனை, முதல் முறை யாக வெற்றிகரமாக ஒரு இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளது. மருத்து வமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க. மாதேஸ்வரன் தலைமையிலான மருத்துவக்  குழுவினர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். நீலாம்பூரில் அமைந்துள்ள ராயல்கேர் மருத்துவ மனையில் நடந்த இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையை, மருத்துவர் மாதேஸ்வரன், இதய மற்றும்  நுரையீரல் மாற்று சிகிச்சை ஆலோசகர் மருத்துவர் ஜி.  பிரதீப், மற்றும் இதய சிகிச்சை மயக்கவியல் ஆலோச கர் மருத்துவர் எஸ். கிருபானந்த் ஆகியோர் அடங் கிய குழு சிறப்பாக செய்து முடித்தது. கோயம் புத்தூர் காவல்துறையின் உதவியுடன், கே.ஜி. மருத்து வமனையிலிருந்து ராயல்கேர் மருத்துவமனைக்கு 20 கி.மீ தூரத்தை 12 நிமிடங்களில் பசுமை வழித்தடம் (Green Corridor) அமைத்து இதயத்தை கொண்டு சென் றது, இந்த அறுவை சிகிச்சையின் வெற்றிக்கு முக்கிய  காரணமாக அமைந்தது. இதுகுறித்து பேசிய மருத்துவர் க. மாதேஸ்வரன், “ராயல்கேர் மருத்துவமனையின் வரலாற்றில் இது  ஒரு முக்கியமான மைல்கல். சர்வதேச தரத்திற்கு இணை யாக எங்கள் மருத்துவமனையின் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சாத னையை நிகழ்த்திய மருத்துவர்கள், மருத்துவப் பணி யாளர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் அனைவருக் கும் வாழ்த்துகள்,” என்றார்.

கல்லால் தாக்கி முதியவர் கொலை

கோவை, ஆக.27- செல்வபுரம் அருகே முதியவர் ஒருவரை கல்லால்  தாக்கியதில், தலையில் பலத்த காயங்களுடன் உயிரி ழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி  பேரூர் சோதனை சாவடி அருகே ஆத்தங்கரை வாய்க் கால் பகுதி உள்ளது. அந்தப் பகுதியில் புதனன்று காலை  தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து  செல்வபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், செல்வபுரம் போலீசார் சம்பவ இடத் துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். பின் னர் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத் துக்கு மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மோப்ப நாய் சிறிது  தூரம் ஓடி சென்று யாரையும் அடையாளம் காட்ட வில்லை. சுமார் 60 வயது மதிக்கத்தக்க அவர் யார்? என்பது குறித்த விவரம் தெரியவரவில்லை. அவர் அந்த  பகுதியில் சில தினங்களாக சுற்றி வந்துள்ளார். அவரு டன் ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் தாக்கி அவரை கொலை செய்திருக்கலாம் என  தெரியவந்துள்ளது. இதுகுறித்து செல்வபுரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல் லால் தாக்கி முதியவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பர்னிச்சர் கடையில் தீ விபத்து

கோவை, ஆக.27- அவிநாசி சாலையில் உள்ள தனியார் பர்னிச்சர் கடை யில் மின் கசிவு ஏற்பட்டு நடந்த தீ விபத்தில் பல லட்சம்  மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் தீக்கிரையா னது. கோவை மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த வர் வரதராஜன். இவர் அன்னூர் அவினாசி சாலையில்  ஏவிஎம் என்ற பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகி றார். இதில் பல லட்சம் ரூபாய் அளவுக்கு பொருட் களை இருப்பு வைத்து குடோனாகவும் உபயோகப் படுத்தி வந்த நிலையில், செவ்வாயன்று இரவு பணியா ளர்கள் வழக்கமான பணியை முடித்துக் கொண்டு கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து இரவு 10 மணிக்கு மேல் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முத லில் சோபா ஒன்றில் பிடித்த தீ பின்னர் கடை முழுவ தும் இருந்த பொருட்களின் பரவி கடையில் வைத் திருந்த குளிர்சாதன பெட்டிகள், கட்டில், மேசை, பிளாஸ் டிக் சேர், ஏசி உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் தீக்கிரையானது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் பார்த்து அன் னூர் தீயணைப்பு துறை மற்றும் கடை உரிமையாளருக்கு  தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு  வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு  மேலாக போராடி தீயை அனைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் தீக்கிரையா னது. இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை, ஆக.27- அவிநாசி சாலையில் உள்ள தனியார் பர்னிச்சர் கடை யில் மின் கசிவு ஏற்பட்டு நடந்த தீ விபத்தில் பல லட்சம்  மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் தீக்கிரையா னது. கோவை மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்த வர் வரதராஜன். இவர் அன்னூர் அவினாசி சாலையில்  ஏவிஎம் என்ற பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகி றார். இதில் பல லட்சம் ரூபாய் அளவுக்கு பொருட் களை இருப்பு வைத்து குடோனாகவும் உபயோகப் படுத்தி வந்த நிலையில், செவ்வாயன்று இரவு பணியா ளர்கள் வழக்கமான பணியை முடித்துக் கொண்டு கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து இரவு 10 மணிக்கு மேல் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முத லில் சோபா ஒன்றில் பிடித்த தீ பின்னர் கடை முழுவ தும் இருந்த பொருட்களின் பரவி கடையில் வைத் திருந்த குளிர்சாதன பெட்டிகள், கட்டில், மேசை, பிளாஸ் டிக் சேர், ஏசி உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் தீக்கிரையானது. இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் பார்த்து அன் னூர் தீயணைப்பு துறை மற்றும் கடை உரிமையாளருக்கு  தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு  வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு  மேலாக போராடி தீயை அனைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் தீக்கிரையா னது. இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு ஐந்து ஆண்டு சிறை

உதகை, ஆக.27- குன்னூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஐந்து  ஆண்டு சிறை விதித்து நீதிபதி உத்தரவிட் டார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வசித்து வரும் தம்பதியின், 10 வயது சிறு மிக்கு அதே பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் (35), பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், குன் னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, 2023 ஆம் ஆண்டு டிச.12  ஆம் தேதியன்று ரவிசந்திரனை கைது செய்த னர். இந்த வழக்கு உதகை மகிளா நீதிமன்றத் தில் நடந்து வந்த நிலையில், செவ்வா யன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ரவிச் சந்திரனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை யும், 10,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதி பதி செந்தில்குமார் உத்தரவிட்டார். மேலும்,  ‘பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய்  இழப்பீடு தொகை வழங்க, மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என, உத்தர வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம்

உதகை, ஆக.27- தேவாலா ஹட்டி புதியகுன்னு பகுதியைச் சேர்ந்தவரை கரடி தாக்கியதில் படுகாயமடைந்தார். நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவாலா ஹட்டி புதிய குன்னு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (55) என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள் ளார். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறியை கரடி  பாலகிருஷ்ணன் விவசாய நிலத்திற்குள் புகுந்து அவரை  தாக்கியது. இதில், அவர் படுகாயமடைந்தார். இதனைய டுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பாலகிருஷ்ணனை கரடியிடமிருந்து மீட்டு  அவரை சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குடியிருப்பின் அருகே சுற்றித் திரியும் கரடியின் நட மாட்டத்தை கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

4 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை, ஆக.27- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெடி குண்டு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர். கடந்த சில மாதங்களாக அடையாளம் தெரியாத நபர்கள்  அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் 3  ஆவது முறையாக செவ்வாயன்று காலை  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடி குண்டு நிபுணர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முழுவதும் சோதனையிட்டனர். அப் போது அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் மீண்டும் 4 ஆவது  முறையாக புதனன்று ஆட்சியர் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து பந்தய சாலை  போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ஆட் சியர் அலுவலகம் முழுவதும் சோதனையிட்ட னர். இதே போல் கோவையில் உள்ள பாஸ் போர்ட் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், பாஸ்போர்ட் அலுவலகம் முழு வதும் முழுமையாக சோதனை செய்யப் பட்டது. இம்மாதிரியாக மின்னஞ்சல் அனுப் பும் நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம்  போலீசார் விசாரித்து வருகின்றனர்.