tamilnadu

img

டிராக்டர் மீது தீயணைப்பு வாகனம் மோதி விபத்து

டிராக்டர் மீது தீயணைப்பு வாகனம் மோதி விபத்து

சேலம், ஆக.6- கெங்கவல்லி அருகே டிராக்டர் மீது தீய ணைப்புத்துறை வாகனம் மோதியதில், காய மடைந்தவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, உடை யார்பாளையம் பகுதியில் மலைப்பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், கெங்கவல்லி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொ) வெங்கடேசன், பணியா ளர்கள் பாலகிருஷ்ணன், சதீஷ்குமார், ரமேஷ், வசந்த் ஆகியோர் தீயணைப்பு வாக னத்தில் செவ்வாயன்று தம்மம்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தை சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் இயக்கி னார். அப்போது கூடமலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதே திசையில் நடு வலூரைச் சேர்ந்த செங்குட்டுவேல் என்ப வர், தம்மம்பட்டி கொக்கான்காட்டை பகு திக்கு ஜல்லி சிப்சம் லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். அப் போது முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரை, தீயணைப்பு வாகனம் முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக  டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து வயல்வெளிக்குள் புகுந்த தீயணைப்பு வாக னம் மின் கம்பத்தின் மீது மோதி நின்றது. இவ்விபத்தில் தீயணைப்பு வாகனத்தில் சென்ற வெங்கடேசன், பாலகிருஷ்ணன் ஆகி யோருக்கு காலில் காயமேற்பட்டது. டிராக்டர் ஓட்டுநர் உட்பட மற்ற 6 பேரும் நல்வாய்ப் பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனும திக்கப்பட்டனர்.