தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
நாமக்கல், செப்.10- பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில், வெப்படை தீயணைப்பு நிலையம் சார்பில், தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தீயணைப்பு நிலைய செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வீரமணி முன்னிலை வகித்தார். வீடு, கடை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும்; மழை வெள்ள பாதிப்பின் போது பாதிக்கப்படும் நபர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. மேலும், வீடுகளில் சிலிண்டர் கசிவு ஏற்படும் பொழுது, உடனடியாக ஜன்னலை திறந்து வைக்க வேண்டும். மின்விளக்குகளை அணைக்க வும், போடவும் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.