tamilnadu

img

தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா

தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா

கோவை, செப்.17- தந்தை பெரியாரின் 147 ஆவது  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, புதனன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் தந்தை  பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை மாவட் டம், புலியகுளத்தில் உள்ள தந்தை  பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி. உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆர்.மகேஸ்வ ரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி. சுரேஷ், மாவட்டச் செயலாளர் த. நாகராஜ், பொருளாளர் சுப்பிர மணி, வழக்கறிஞர் ஆறுச்சாமி, தமு எகச மாவட்டச் செயலாளர் அ. கரீம் மற்றும் பலர் கலந்து கொண்ட னர். இதேபோன்று, தபெதிக உள் ளிட்ட அமைப்புகளின் சார்பில் பெரி யார் பிறந்தநாள் விழா நடைபெற் றது. இதில், தந்தை பெரியார் திரா விடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கேரளம் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கேரளம்  மாநிலம், கோட்டையம் மாவட்டம்,  வைக்கம் தந்தை பெரியார் நினை வகத்தில் தமிழக அரசின் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோட்டையம் மாவட்ட ஆட்சியர் சேத்தன் குமார் மீனா பெரியாரின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி  மரியாதை செலுத்தினார். அருகில்  கூடுதல் ஆட்சியர் ஸ்ரீஜித், கோவை  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு  அலுவலர் ஆ.செந்தில் அண்ணா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். ஈரோடு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக  சார்பில், பன்னீர்செல்வம் பூங்கா வில் அமைந்துள்ள அவரது முழு  உருவச்சிலைக்கு தமிழ்நாடு வீட்டு  வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்து சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந் திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். பெரியார் - அண்ணா  நினைவகத்திலுள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ச.கந்த சாமி மலர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். மாவட்ட  வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, மேயர் சு.நாகரத்தினம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  அ.சுகுமார் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.