tamilnadu

img

நொய்யல் நதியை காப்பாற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம்

நொய்யல் நதியை காப்பாற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம்

திருப்பூர், ஜூலை 13- நொய்யல் நதியை காப்பாற்ற வலியு றுத்தி, மங்கலம் - அவிநாசி சாலை நொய் யல் நதிக்கரையில் ஞாயிறன்று உண் ணாவிரதம் நடைபெற்றது. தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், நொய் யல் நதி மீட்பு மற்றும் விவசாய நிலங் களை பாதுகாக்க ஒன்றிய மற்றும்  தமிழ்நாடு அரசுகளின் பொறுப்பின் மைக்கு எதிராக திருப்பூர் மாவட்டம், மங்கலம் - அவிநாசி சாலை நொய் யல் நதிக்கரையில் ஞாயிறன்று மாவட் டம் தழுவிய உண்ணாவிரதம் நடை பெற்றது. இப்போராட்டத்தில், தமிழ் நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க  ஒருங்கிணைப்பாளர் இரா.சா.முகிலன்,  நேர்மை மக்கள் இயக்க ஒருங்கிணைப் பாளர் பழ.ரகுபதி உள்ளிட்ட சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு மக்கள் இயக்கங்கள் அரசியல் கட்சி  நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். தொழிற் சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்கா மல் வெளியேற்றுவதால் நொய்யல்  நதி கடுமையான நச்சுத் தன்மையோடு  மாசுபடுகிறது. உள்ளாட்சி நிர்வாகம்  சாக்கடைக் கழிவுநீர், குப்பை, மருத்துவ மனை கழிவுகள், தொழிற்சாலை கழிவு கள், கட்டிடக்கழிவுகள் கலந்து நிலத்தடி  நீர் மாசு, காற்று மாசு மண் வளம் பாதிப்பு  அடைந்து விவசாய நிலங்களில் ஏற்ப டும் பாதிப்புகள், நொய்யல் ஆறு மாசு பட்ட நீரால் செல்லும் வழி எல்லாம் விஷ மாகி அழிந்து வருகிறது. இதனால் ஒவ் வொரு மனிதருக்கும் ஏற்படும் பாதிப்பு கள் கால்நடைகள் மற்றும் மரங்கள் தாவ ரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பலர் உரையாற்றினர்.