tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஏரி கால்வாய்களை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி, அக்.11- ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரி கால்வாய்களை தூர்வார வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டாட்சியர் அலுவலகத் தில் வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடை பெற்றது. கோட்டாட்சியர் செம்மலை தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், பாப்பிரெட்டிப் பட்டி அருகே உள்ள தனியார் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது, நேரடியாக பீணியாறு வழியாக செல்கிறது. இதனால், அப்பகுதியி லுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே, தனி யார் ஆலை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். துறிஞ்சிப்பட்டி ஏரி வாய்கால்களை தூர்வார வேண்டும், தென்னகரத்தில் உள்ள ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண் டும். அதேபோல, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சாலூர் வழி யாக சென்ற அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டதால் மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இத்தடத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும். அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள நீர் வழித்தட கால்வாய் களை தூர்வார வேண்டும், என்றனர்.

அனைத்து ஊழியர்களும் பணியில் இருப்பர்: தீயணைப்பு அலுவலர் பேட்டி

கோவை, அக்.11- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 24 மணி நேரமும் அனைத்து தீயணைப்பு ஊழியர்களும் பணியில் இருப்பார் கள் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தெரி வித்துள்ளார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், “வாங்க கற்றுக் கொள்வோம்” என்ற தலைப்பில் தீ  தடுப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த இரண்டு நாள் இல வச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் நடை பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு  தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற சிறப்புப் பயிற்சி வகுப்பில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளு காண்டி உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் பங்கேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பயிற்சி வகுப்பில், தீ விபத்து ஏற்பட்டால் அதைக் கட்டுப்படுத்துவது எப்படி, தீ பரவாமல் தடுப்பதற்கான முறை கள், மற்றும் பேரிடர் மீட்புப் பணிகள் ஆகியவை குறித்து  விரிவாக வகுப்புகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, தீயணைப் பான் கருவிகளைப் பயன்படுத்துவது மற்றும் துரிதமாகச் செயல்படுவது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி  பேசுகையில், தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், வரும் திங்களன்று (நாளை) முதல் கோவை மாவட்டம் முழு வதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்ட மிட்டுள்ளோம். தீபாவளியை முன்னிட்டு வரும் நாட்களில் அனைத்து தீயணைப்புத் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரி கள் தொடர் பணியில் இருப்பார்கள் என்றும், தீ விபத்துகள் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்பு நிலை யங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள்

ஈரோடு, அக்.11- மனைவியை எரித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஈரோடு - சென்னிமலை சாலை, கே.கே. நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (45). இவரது மனைவி ரேவதி (41), ஈரோட்டிலுள்ள நகைக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ள னர். இந்நிலையில், ஆடி மாத பண்டிகைக் காக மூத்த மகள் மோனிஷாவை, ஈரோட்டிற்கு அழைத்து வருவதற்கு ரேவதியை அழைக்கா மல் இளைய மகள் ஐஸ்வர்யாவுடன் குமரே சன் தனது ஆட்டோவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி நாமக்கல் சென் றார். இதுகுறித்து தகவலறிந்த ரேவதியும் நாமக்கல்லுக்கு புறப்பட்டார். இதனையறிந்த குமரேசன் மகளையும், மருமகனையும் அழைத்து வராமல் பாதி வழியில் திரும்ப ஈரோடு வந்தார். இதன்பின் அடுத்த நாள்  ரேவதி வீட்டில் சமையல் செய்து கொண்டி ருந்தபோது, அங்கு வந்த குமரேசன், ரேவதி யிடம் நாமக்கல்லுக்கு சென்றது குறித்து கேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளார். அப் போது குமரேசன் அங்கிருந்த மண்ணெண் ணெயை எடுத்து ரேவதி மீது ஊற்றி தீ வைத் துள்ளார். இதில் படுகாயமடைந்த ரேவதி உயி ரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீ சார் குமரேசனைக் கைது செய்து சிறையில்  அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி சொர்ண குமார், குமரேசனுக்கு ஆயுள் தண்டனை யும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

நாளை மின்தடை

உதகை, அக்.11- நீலகிரி மாவட்டம், அதிக ரட்டி துணை மின் நிலையத் தில் திங்களன்று (நாளை) மாதாந்திர பராமரிப்புப் பணி கள் நடைபெறவுள்ளது. இத னால் அதிகரட்டி, பால கொலா, தேவர்சோலை, காத் தாடிமட்டம், நுந்தளா, தாம் பட்டி, மணியட்டி, நான்சச், ஆருகுச்சி, உலிக்கல், மஞ்சக் கொம்பை, கிளிஞ்சடா, சேலாஸ், பாரதி நகர், தூதூர் மட்டம், கரும்பாலம், கிளன் டேல் உள்ளிட்ட பகுதிகளில் திங்களன்று காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இருக்காது.