கணினி பட்டா கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சேலம், செப்.12- 200க்கும் மேற்பட்ட ஏக் கர் நிலங்களுக்கு கணினி பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத் தூர் வட்டம், ராமநாயக்கன் பாளையம் ஊராட்சி, தாணி மரம் வடக்கு காடு பகுதியில் சுமார் 95 குடும்பங்களுக்கு 200க்கும் மேற் பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு வழங் கிய பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்யாமல் வருவாய்த்துறையினர், விவசா யிகளிடம் “பேக்ஃபைல்” கேட்டு காலம் தாழ்த்தி வருகின்றனர். தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக சேலம் மாவட்ட தகவல் ஆணையரிடம் ‘பேக்ஃபைல்’ கேட் டால், அது மாவட்ட பட்டியலின துறைக்கு அனுப்புகிறது; அது ஆத்தூர் வட்ட தனி தாசில்தாருக்கு அனுப்புகிறது என அலட்சி யமாக பதிலளித்து வருகின்றனர். வருவாய்த் துறையிடம் போதுமான ஆவணங்கள் இருந்தும், கணினி பட்டா தராமல் விவசாயி களை ஆண்டுக்கணக்கில் ஏமாற்றி வருகின்ற னர். இந்நிலையில், உடனடியாக கணினி பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்டத் தலைவர் இல.கலை மணி தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மாவட் டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, துணைச்செய லாளர் எம்.ராமசாமி, மலைவாழ் மக்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஏ.பொன்னுசாமி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இதில் வட்டச் செயலாளர் ஆர்.வெங்கடாஜலம், துணைச்செயலாளர் வி.சுப்பிரமணியன், பொருளாளர் எல்.முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கோட்டாட்சி யரிடம் கணினி பட்டா கேட்ட் 95 பேர்களின் ஆவண விவரங்களுடன் பெயர் பட்டியல் மீண்டும் வழங்கப்பட்டது. உடனடியாக நடவ டிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி யளித்தனர்.