விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
சேலம், ஆக. 4 - தேவூர் அருகே உள்ள குறுக்கு பாறையூரில் திடக்கழிவு மேலாண் மைத் திட்டத்தின் கட்டுமானப் பணி களை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி, தமிழ்நாடு விவசாய சங்கத் தினர் மற்றும் அப்பகுதி விவசாயி கள் இணைந்து திங்களன்று கருப் புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசிராமணி பேரூராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை களைக் கொட்டுவதற்காக, குறுக்கு பாறையூரில் ஒரு இடம் தேர்வு செய் யப்பட்டு, திடக்கழிவு மேலாண் மைத் திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற் றும் விவசாய சங்கம் ஆரம்பத்தி லிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த னர். இதனைத்தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள், பேரூராட்சி நிர்வாகத் தால் மீண்டும் தொடங்கப்பட்டுள் ளது. இதனையடுத்து, விவசாயி கள் மீண்டும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச் செயலாளர் பெருமாள், மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மற்றும் வட்டாரத் தலைவர் ராஜேந் திரன் ஆகியோர் தலைமையில், குறுக்குபாறையூரில் திரண்ட விவ சாயிகள் கருப்புக் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட வீடு களில் விவசாயிகள் கருப்புக் கொடி களைக் கட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதேபோல, பச்ச பாலியூர் பகுதியில் உள்ள விவசாயி களும், கடந்த 50 நாட்களாக திடக் கழிவுத் திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் குறுக்குபாறையூர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரி வித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.