மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
தருமபுரி, ஜூன் 13- தருமபுரி அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த வழக்கில், மின்வேலி அமைத்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், ஜோலி கோட்டை, கோம்பை கிராமம், நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் க.ராஜா (52). விவசாயியான இவர் தனது நிலத்தில் உள்ள பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கோ.கண்ணன் என்ற இளைஞர், கடந்த 2017 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதியன்று அப்பகுதியைக் கடந்து சென்றபோது, மின்வேலி கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சா ரம் தாக்கி நிகழ்விடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜா, யாருக்கும் தெரியாமல் கண்ணன் உடலை சாக்குப் பையில் கட்டி அருகிலிருந்த ஆற்றங் கரையில் குழிதோண்டி புதைத்தார். இதன் பின் சில நாட்கள் கழித்து அப்பகுதி கிராம நிர் வாக அலுவலரிடம் சென்று விவரத்தைக் கூறி, சரணடைந்தார். இதுகுறித்து மதிகோண்பா ளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, தருமபுரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வியாழ னன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கண்ணன் உயிரிழக்க காரண மாக இருந்ததற்காகவும், அவரது சடலத்தை மறைத்த குற்றத்திற்காகவும் ராஜாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயி ரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
சிகை அலங்காரம் செய்வதில் தகராறு வடமாநில தொழிலாளி மீது தாக்குதல்
நாமக்கல், ஜூன் 13- குமாரபாளையம் அருகே சலூன் கடையில் சிகை அலங் காரம் செய்வதில் ஏற்பட்ட தகராறில், வடமாநில தொழி லாளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வட்டமலை பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் சிகை அலங்கார (சலூன்) கடை வைத்து நடத்தி வருகின்றனர். இதன் உரிமையாளராக சாஜித் என்பவர் உள்ளார். கடை ஊழியர்களான சாவிஸ், தினேஷ் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள், சிகை அலங்காரம் செய்வதற்காக புதனன்று வந்துள்ளனர். அப்பொழுது சிகை அலங்காரம் செய்த ஊழியர், தனது தலை முடியை தவறாக திருத்திய தாக கூறி சதீஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மோதல் ஏற்பட்டு, சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள், வடமாநில ஊழி யர்களை சரமாரியாக தாக்கியதுடன், கடையில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர். இந்த தகராறினை சாதகமாக பயன்படுத்தி அங்கிருந்த இளைஞர் ஒருவர் கடை ஊழியரின் செல்போனையும் திருடி சென்றுள்ளார். இதனிடையே, தகராறில் வடமாநில இளைஞர் ஒருவ ருக்கு காயங்கள் ஏற்பட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
சேலம், ஜூன் 13- எடப்பாடி அருகே சாலையில் சென்ற லாரியின் டயர் வெடித்து, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், சித்தூர் ரெட்டிபட்டி யைச் சேர்ந்த சிவா (35) என்பவர், தனது உறவினரான சேகர் (50) என்பவருடன் வியாழனன்று இருசக்கர வாகனத்தில் எடப்பாடியிலிருந்து சங்ககிரி நோக்கி சென்று கொண்டிருந் தார். அப்போது, எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலை, அரசு கலைக்கல்லூரியை அடுத்த கோணமோரி மாதேஸ்வரன் கோவில் பகுதியில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி வேகமாக வந்த லாரியின் முன்புற டயர் திடீரென வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. பலத்த காயமடைந்த சிவா, சேகர் ஆகிய இருவ ரும் உயிரிழந்தனர். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.