tamilnadu

​​​​​​​யானை தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

யானை தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

ஈரோடு, அக்.8- கடம்பூர் மலைப்பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்ற விவசாயி, காட்டு யானை தாக்கி உயிரி ழந்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த  கடம்பூர் மலைப்பகுதி, ஜீவா நகரைச் சேர்ந்தவர்  காளியப்பன் (60). விவசாயம் மற்றும் கால்நடை  வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் பழனிசாமி யுடன் இருசக்கர வாகனத்தில் மாக்கம்பாளையம் சாலை, குரும்பூர் பள்ளம் வனப்பகுதியிலுள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு செவ்வாயன்று சென்றுள்ளார். குரும்பூர் பள்ளம் அருகே வாக னத்தை நிறுத்திவிட்டு, வனப்பகுதியில் இருவரும் நடந்து சென்றுள்ளனர். அப்போது புதர் மறைவில் நின்றிருந்த யானை இருவரையும் துரத்தியுள்ளது. யானையிடமிருந்து தப்பிப்பதற்காக இருவரும் வேக மாக ஓடியுள்ளனர். அப்போது கீழே விழுந்த காளியப் பனை காட்டு யானை மிதித்தது. இதில் பலத்த காய மடைந்த காளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பழனி சாமி, கடம்பூா் காவல் துறையினர் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வனத் துறையினர், காளியப்பனின் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.