முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலி பனியன்கள்
திருப்பூர், ஆக. 23 – முன்னணி பனியன் பிராண்டுகளின் பெய ரில் போலியாக பனியன்களை தயாரித்து விற் பனை செய்யவிருந்த பனியன்கள் திருப்பூ ரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அன்னையம்பாளையம் பகுதி உள் ளது. இங்குள்ள கருப்பராயன் கோவில் வீதி யில் உள்ள ஒரு குடோனில் பிரபல பனியன் பிராண்டுகளின் பெயரில் போலியாக தயா ரிக்கப்பட்ட பனியன்கள் இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, பல்வேறு பிராண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழி யர்கள் இந்த குடோனை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கும் தக வல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வேலம்பாளையம் போலீசார் சோதனை மேற் கொண்டதில், பல்வேறு பிரபலமான பிராண் டுகளின் (அமுல், லக்ஸ், டிக்சி) பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பனியன்கள் சுமார் 15,000 பாக்ஸ்கள் சுமார் (ஒரு கோடி ரூபாய் மதிப்பு) அடுக்கி வைக்கப்பட்டிருந் தது. இந்த போலியான தயாரிப்புகள் தொடர் பாக பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர் கள் புகார் அளித்த நிலையில் போலீசார் குடோ னின் உரிமையாளர், மற்றும் முன்னணி நிறுவ னங்களின் பெயரில் பனியன் தயாரித் தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து போலியாக தயாரிக்கப்பட்ட 15 ஆயிரம் பனியன் பாக்ஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பிரபல பனியன் பிராண்ட் நிறுவனத்தினர் கூறுகையில், பிர பலமான பிராண்டுகளின் பெயரில் போலி யான தயாரிப்புகள் மார்க்கெட்டில் அதிகம் உலாவி வருகிறது. குறிப்பாக எங்களது பிராண்ட் (லக்ஸ்) பனியன்கள் வட மாநிலங் களில் அதிக அளவு விற்பனையாகி வரு கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெய்ப்பூர் மாநிலத்தில் எங்களது முகவர்க ளுக்கு 500 பாக்ஸ் பனியன்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதை சோதனை செய்தபோது போலியாக இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அதை டெலி வரி செய்த ட்ரான்ஸ்போர்ட் மூலமாக எங்கு தயாரிக்கப்படுகிறது என்பதை கண்டறிந்து இன்று இங்கு வந்து இந்த குடோனை கையும் களவுமாக பிடித்துள்ளோம். எங் களைப் போன்றே ஏராளமான பிராண்டுக ளின் பெயரில் போலியாக பனியன்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். எங்களது பிராண்ட் பெயரில் மோசடி செய்த வர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.