tamilnadu

img

ஈரோடு புத்தகத் திருவிழா ஆக.1 ஆம் தேதி துவக்கம்

ஈரோடு புத்தகத் திருவிழா ஆக.1 ஆம் தேதி துவக்கம்

ஈரோடு, ஜூலை 30- ஈரோடு புத்தகத் திரு விழா வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று தொடங்கப்பட உள்ளதை முன்னிட்டு ராட்சத பலூனை பறக்கவிட்டு பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.  பொது நூலகத்துறை மற் றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 1 ஆம் முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடை பெறும் இப்புத்தக கண்காட்சியில் சுமார்  230 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இந்த  புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் பல்வேறு விளம்பரப்பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. அதனைத்தொடர்ந்து செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி மாநகராட்சி  அலுவலகத்தில் ராட்சத பலூனை பறக்க விட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாநக ராட்சி மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர்  வே.செல்வராஜ், ஆணையாளர் அர்பித் ஜெயின் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.