tamilnadu

img

சம வேலைக்கு சம ஊதியம் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மாநாடு வலியுறுத்தல்

சம வேலைக்கு சம ஊதியம்  குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மாநாடு வலியுறுத்தல்

திருவண்ணாமலை, செப். 21- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் 12 ஆவது மாநில மாநாடு திருவண்ணா மலை மாவட்டம், செய்யாறில் செப்.20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடை பெற்றது. மாநிலத் தலைவர் ஏ. புருஷோத்தமன் தலைமை தாங்கி னார். தீர்மானங்கள் வாரியப்பணி புரியும் தற்காலிக ஊழியர்களை பணிவரன் செய்து நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும், கீழமை நீதிமன்றங்களில் சாதகமாக பெற்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமலாக்க வேண்டும் ,பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூ தியம் உள்ளிட்ட ஓய்வுகாலப்பலன்கள் வழங்க வேண்டும் , காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரிய தற்காலிக பணி யாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பணி யிடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும், களப்பணியாளர்களுக்கு முறையான காலக்கிரமத்தில் பதவி உயர்வ வழங்க  வேண்டும்,  பணிக்காலத்தில் மரணமடைந்த வாரிய ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உடன்பணி வழங்க வேண்டும்,அரசு அறிவித்த நாளிலேயே அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்,வாரிய பணிகளை ஒப்பந்த முறையில் பராமரிப்பதை கைவிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படை யில் தற்காலிக பணியாளராக பணி யாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு ஷெட்யூல் ஆப்ரேட் படி ஊதியம் வழங்கும் முறையை நிறுத்தியதை மீண்டும் கொண்டு வர வேண்டும், வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் போன சட்டத்தின்படி வாரியம் அறிவிக்கும் குறைந்தபட்ச போனஸ் ரூ.7000 வழங்க வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டங்களில் பணி யாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு வாரியம் வழங்கக்கூடிய ஊதியத்தை வங்கி மூலம் மட்டுமே வழங்க வேண்டும்என்பன உள்ளிட்டட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் வாழ்த்துரையாற்றினார்.  சிஐடியு மாநில துணை பொது செயலாளர் எஸ். கண்ணன் பேசுகை யில், மக்களுக்கு  தேவையான குடிநீரை விநியோகிக்கும்  அத்தியாவசிய பணியை குடிநீர் வடிகால் வாரிய ஊழி யர்கள் செய்து வருகின்றனர். அத்தியா வசியமான குடிநீரை, பாஜக மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தாராள மாக கொள்கைகள் காரணமாக தனியாருக்கு தாரைவார்க்கப் பட்டுள்ளது. இலவசமாக கிடைக்கும் தண்ணீரை பணத்திற்காக விற்பனை செய்யும் கொடுமையும் இந்த தேசத்தில் நடந்து வருகிறது. தண்ணீர் தனியார் மயமாவதை தடுக்க நாட்டு மக்களுடன் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தெரிவித்தார். மாநில துணைத்தலைவர் கே. செல்வம் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு மாநிலத் தலைவர் எம் .ஆத்மநாபன், பொதுச் செயலாளர் ஆர். சிவபெரு மாள், பொருளாளர் பி. குணசேகரன், 6 துணைத் தலைவர்கள், 6 இணைச் செயலாளர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.