திருப்பூரில் பொறியாளர் தினம் சிவில் இன்ஜினியர்கள் கொண்டாட்டம்
திருப்பூர், செப்.15 – இந்தியாவின் புகழ் பெற்ற பொறியாளர் எம்.விஸ்வேஸ்வ ரய்யா பிறந்த தினமான செப்டம்பர் 15 திங்களன்று திருப்பூ ரில் சிவில் இன்ஜினியர்கள் அசோசியேஷன் சார்பில் பொறி யாளர் தின விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் மங்கலம் சாலை டிசிஇஏ கட்டிடத்தில் நடை பெற்ற விழாவுக்கு சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் தலைவர் குமார் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.ராஜசேகரன் வரவேற்றார். முன்னாள் மாநிலத் தலைவர் சி.தில்லைராஜன், முன்னாள் மாநிலப் பொருளாளர் எஸ்.பொன்னுசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் பட்டயத் தலைவர் எஸ்.சிதம்ப ரம், முன்னாள் தலைவர்கள் எம்.கலைச்செல்வன், கே.சண்மு கராஜ், சி.ரத்னசபாபதி, வி.மணிகண்டன், பி.கே.முரளி, ஸ்டா லின்பாரதி, எஸ்.ஜெயராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு விழாவில் வெற்றி பெற்றோருக்கு நினைவுப் பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. நிறைவாக துணைச் செயலாளர் டி.சரவணக்குமார் நன்றி கூறினார். முன்னதாக பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா படத் திற்கு மாலை அணிவித்து பொறியாளர்கள் அனைவரும் மரி யாதை செலுத்தினர்.