போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
சேலம், செப்.16- தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு கடந்த 25 மாதங்க ளாக வழங்காமல் காலதாமதப்படுத்தப்படும் தங்களது பணி ஓய்வுக்கான பணப்பயன்களை உடனே வழங்க வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலு வையை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆக.18 முதல் போக்குவரத்து ஊழி யர்கள், ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்போராட்டத்திற்கு ஆத ரவு தெரிவித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தியும் திங்களன்று தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட் டம், மேட்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழி யர் சங்க வட்டக்கிளை தலைவர் சி.காமராஜ் தலைமை வகித்தார். செயலாளர் து.சிங்கராயன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் போக்குவரத்து ஓய்வூதியர் சங்க நிர்வாகி சுப்பிரமணியன், மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் கலைமணி, அரசு ஊழியர் சங்க துணைத்தலை வர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், உமா சங்கர் நன்றி கூறினார். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தனசேகரன் துவக்க வுரையாற்றினார். இதில் சமூக நலத்துறை பணியாளர்கள் சங்க நிர்வாகி குரு சக்திவேல், சாலைப் பணியாளர் சங்க வட்டக்கிளை தலைவர் சம்பத், ஓய்வூதியர் சங்கத்தின் விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், இணைச்செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.