tamilnadu

img

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஆட்டோவை சேதப்படுத்திய யானை

உதகை, ஜூலை 29- பந்தலூர் அருகே பாடந்துறை பகுதியில் சாலையில் சென்ற ஆட்டோவை வழிமறித்து சேதப்படுத்திய காட்டு யானையை, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே பாடந்துறை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் பாடந்துறை பகுதியில் செவ்வாயன்று அதிகாலை வனப்பகு தியில் இருந்து வெளியேறி சாலையில் உலா வந்த காட்டு யானை அவ்வழியாக வந்த ஆட்டோவை வழிமறித்தி மிகுந்த ஆக்ரோஷமாக தாக்கி சேதப்படுத்தியபோது ஓட்டுநர் ஆட்டோவை விட்டு ஓட்டம் பிடித்ததால் உயிர்பிழைத்தார். பின்பு காட்டு யானை அருகில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நுழைந்தது. அதி காலை நேரம் என்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரும் பள்ளி வளாகத்தில் இல்லாததால் பெரும் அசம்பா விதமானது தவிர்க்கப்பட்டது. பள்ளி வளாகத்தின் அருகே யானையின் நடமாட்டம் காணப்படுவதால் வனத்துறையினர் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெட்ரோல் பங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

கோவை, ஜூலை 29- குறிச்சிப் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில், கேஸ் நிரப்ப வந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் ஊழி யர்கள் மற்றும் அங்கிருந்த வர்கள் அதிர்ச்சியடைந்த னர். கோவை, குறிச்சிப் பகுதி யைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் தனது நண்பரின் ஆம்னி காரை வாங்கிக் கொண்டு கேஸ் நிரப்புவதற் காக குறிச்சி பாரத் பெட்ரோ லியம் பங்கிற்கு திங்களன்று இரவு வந்துள்ளார். காரில் கேஸ் நிரப்பிய பின்னர் வாக னத்தை ஆன் செய்த போது திடீரென தீப்பிடித்தது. உட னடியாக வாகனத்தில் இருந்த சுரேந்திரன் கீழே  இறங்கினார். கார் தீப்பிடித்த நிலையில் உடனடியாக பெட் ரோல் பங்க் ஊழியர்களும், பொதுமக்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ  வேகமாக பரவி கார் முழுவ தும் பற்றி எரிந்தது. நீண்ட  நேர போராட்டத்திற்கு பின் னர் தீ அணைக்கப்பட்டது. பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி யது.

கீழடி ஆய்வறிக்கையை திருத்தமின்றி உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, சேலம்  கோட்டை மைதானத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் முன்பு வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சங்கத்தின் மேற்கு மாநகரத் தலைவர் கோபி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செய லாளர் வி.பெரியசாமி, பொருளாளர் வெற்றிவேல், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டார்வின், கிழக்கு மாநகரத் தலைவர் விமல் குமார், வடக்கு மாநகர நிர்வாகி சௌந்தர், பனமரத்துப்பட்டி நிர்வாகி பிரபு, தொல்லியல் ஆய்வாளர் ஜி.சுல்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.