மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில செயற்குழு கூட்டம்
கோவை, மே 24- ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட் டத்தை கைவிட மின் வாரிய ஒய்வு பெற் றோர் நல அமைப்பின் மாநில செயற் குழு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின் வாரிய ஒய்வு பெற் றோர் நல அமைப்பின் மாநில நிர்வாகி கள் மற்றும் செயற்குழு கூட்டம் கோவை மாவட்டம், சிவானந்தா காலனியில் உள்ள ஜெஜெ ஹாலில் வியாழன் மற்றும் வெள்ளி இரண்டு நாட்கள் நடை பெற்றது. சங்கத்தின் மாநிலத் தலை வர் எஸ்.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நடைபெற்ற பணிகள் குறித்து சங்க பொதுச்செயலா ளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மாநில பொருளாளர் ஏ.பழனி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இக்கூட்டத்தில் சிஐடியு மின் ஊழியர் மத்தியமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் வாழ்த்தி பேசினார். இதில், மருத்துவ காப்பீடு திட்டத் தில் மருத்துவத்திற்காக செலவாகும் முழுத் தொகையும் திரும்ப வழங்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் இத்திட்டத்தை ஏற்று செயல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு சாத கமாக இருப்பது போல தோற்றம் அளிக் கக்கூடிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், இவ்வமைப்பின் மாவட்டச் செய லாளர் பா.விவேகானந்தன், இணைச் செயலாளர் சி.வி.மீனாட்சிசுந்தரம் உள் ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.