பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் தேர்வு
கோவை, செப்.28- கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழு கூட்டம், ஞாயி றன்று ஆடிஸ் வீதியிலுள்ள அலுவலகத் தில் நடைபெற்றது. மன்றத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஐஸ்வர்யா ஆண்டறிக்கை, பொருளாளர் விஜய் வரவு-செலவு கணக்குகளை முன்வைத்தனர். அப் போது, மூத்த பத்திரிக்கையாளர் புக ழேந்திக்கு சால்வை அணிவித்து நினை வுப்பரிசு வழங்கப்பட்டது. இக்கூட்டத் தில், பொதுக்கூட்டங்களுக்கு கண்டிப் பான பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், சட்ட நடவடிக்கை, ஊடக பொறுப் புணர்வு, கரூரில் உயிரிழந்தோர் குடும் பங்களுக்கு இழப்பீடு மற்றும் உயர்மட்ட விசாரணை அமைக்க வேண்டும். மிகைப்படுத்தப்பட்ட செய்தி வெளியீடு மற்றும் டி.ஆர்.பி. நோக்கு அணுகு முறையை கண்டித்தும், ஊடக நெறி முறை குழு அமைக்க அரசை வலியு றுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. முன்னதாக, வேட்புமனுத்தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, மன்றத்தின் தலைவராக காமராஜ் (பிடிஐ), செயலாளராக தங்கராஜா (தினமணி), பொருளாளராக ரத்தன் குமார் (நியூஸ் எக்ஸ்பிரஸ்), துணைத் தலைவர்களாக தர்மதுரை (தினகரன்), வில்சன் தாமஸ் (தி இந்து), இணைச் செயலாளர்களாக கார்த்திக் பிரபு (தின மணி), தென்னிலவன் (சன் டிவி), செயற் குழு உறுப்பினர்களாக அ.ர.பாபு (தீக் கதிர்), வைரப்பெருமாள் (நியூஸ் 18 தமிழ்நாடு), அரவிந்த்ராஜ் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்), பிரவீன்குமார் (புதிய தலைமுறை), ஜீவா (தீக்கதிர்), விஜயபாஸ்கர் (மலையாள மனோ ரமா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள் ளனர். கரூர் துயரத்திற்கு அஞ்சலி முன்னதாக, கரூரில் சனியன்று இரவு தவெக தலைவர் விஜய்-யின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று, உயி ரிழந்த 40 பேருக்கு பத்திரிக்கையா ளர்கள் அஞ்சலி செலுத்தினர். கருப்புப் பட்டை அணிந்து பொதுக்குழு கூட்டத் திலும் பங்கேற்றனர்.
