ஆனங்கூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க ஈஸ்வரன் எம்எல்ஏ வலியுறுத்தல்
நாமக்கல், ஜூலை 8- விபத்துகள் நடப்பதற்கு முன்பு, லக்காபுரம் ஆனங் கூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப் பினர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கின்ற கொக்கராயன்பேட்டை - லக்காபுரத் திற்கிடையில் உள்ள பரிசல் துறை ரயில்வே கேட் மற்றும் ஆனங்கூர் ரயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கக்கோரி பலமுறை சட்ட மன்றத்தில் கோரிக்கை வைத்தும் நடைபெறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இரண்டு நெடுஞ்சாலை களிலும் போக்குவரத்து அதிகம். அதேபோல இந்த சாலைகளை கடக்கின்ற ரயில்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளன. மனிதர்களைக் கொண்டு ரயில்வே கேட் திறந்து மூடப்படுவதால் விபத்துக்கான வாய்ப்பு கள் அதிகமாக உள்ளன. அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசரமாக ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு செல்லக் கூடியவர்களும் பெருவாரியாக பாதிக்கப்படுகிறார் கள். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இதனுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து சட்டசபையிலேயே இந்த இரண்டு பாலங்களும் விரைவில் முடித்து தரப்படும் என்று ஒவ்வொரு முறையும் பதிலும் சொல்லி இருக்கி றார். ஆனால் இப்பணிகளுக்கான அரசு உத்தரவு இது வரை போடப்படவில்லை. எனவே, விபத்துகள் நடப்ப தற்கு முன்பாக உடனடியாக ரயில்வே மேம்பாலத்தை அமைத்துத்தர அரசு முன்வர வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத் தொழிலாளி கொலை: 2 பேர் கைது
கோவை, ஜூலை 8- ஈச்சனாரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகரா றில் கட்டிடத் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள போடிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக் குமார் (33). கட்டிடத் தொழிலாளியான இவர் தனது நண்பர் ஜீவாபிரசாந்த் மற்றும் சிலருடன் ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சியில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு, மலு மிச்சம்பட்டியில் உள்ள மது கூடத்தில் மது குடித்துள்ள னர். அப்போது ஜெயக்குமாருக்கும் அங்கு மது குடிக்க வந்த வெளி நபர்கள் இரண்டு பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு கலைந்து சென்றுவிட்ட னர். பின்னர் ஜெயக்குமார் உட்பட இரண்டு பேரை ஏற்கனவே தகராறு செய்தவர்கள் காரில் பின் தொடர்ந்து வந்தனர். மேலும், காரில் வந்த அவர்கள் மீண்டும் தகரா றில் ஈடுபட்டதோடு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயக்குமார் கழுத்தில் சாராமாரி யாக குத்தினர். இதில் படுகாயமடைந்த ஜெயக்குமாரை அங்கிருந் தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்து வமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மதுக்கரை போலீசார் ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஜெயக்குமாரை கொலை செய்த ஆத்துப்பாலத்தை சேர்ந்த முகமது ஹாரூன் (32) மற்றும் குறிச்சியை சேர்ந்த விக்கி என்கிற விக்ர மன் (24), ஆகிய இருவரை கைது செய்தனர். விசா ரணைக்கு பின் அவர்களை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
பாதாள சாக்கடை அமைக்கக் கோரிக்கை
நாமக்கல், ஜூலை 8- ஆக்கிரமிப்பை அகற்றி பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலைப்பட்டிபுதூர் பொதுமக் கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், முதலைப்பட்டிபுதூர் 2 ஆவது வார்டில் சாலைப்பணி கள் நடைபெற்று வருகின்றன. தார்ச்சாலை அமைக் கும் முன்பாக வட்டாட்சியர் மற்றும் நில அளவையர் மூலம் அளந்து எல்லை கற்கள் நடப்பட்டு, ஆக்கிர மிப்பை அகற்ற வேண்டும். பாதாள சாக்கடை, கழிவுநீர் குழாய் பதித்த பின்னரே, புதிய சாலை அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் படுகொலை: போலீசார் விசாரணை மேட்டுப்பாளையம்
, ஜூலை 8- மேட்டுப்பாளையம் அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கார மடை பகுதி ஆயர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பால் வியாபாரி சுந்தர்ராஜ் என்பவரது மகன் சஞ்சய் (23). தந்தையுடன் சேர்ந்து இவரும் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், திங்களன்று இரவு தான் தங்கியிருந்த வீட்டில் தூங்கச் சென்ற சஞ்சய் காலை வெகு நேரமாகியும் பால் கறக்க வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த இவரது தாயார் அங்கு சென்று பார்க்கும் போது வீட்டின் கதவு திறந்தபடி இருந்துள்ளது. உள்ளே சென்று பார்க்கும் போது சஞ்சய் பலத்த காயங்களுடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார், காரமடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘பெண் குழந்தைகளை காப்போம்’
சேலம், ஜூலை 8- ‘பெண் குழந்தைகளை காப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது, கோவை சரக ஐஜி செந்தில்குமார் செய்தியாளர்களிடம் பேசுகை யில், இரவு நேரங்களில் காவல் நிலையத்திற்கு பொதுமக் களை கட்டாயப்படுத்தி விசாரணைக்காக அழைத்து வரக் கூடாது. குற்றம் உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்கு காலதாமதம் ஏற்பட் டால், இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் குற்றவாளி களை தங்க வைக்கும் பொழுது ஆய்வாளர் பொறுப்பில் உள்ளவர்கள் பாதுகாப்பில் இருக்க வேண்டும். மேலும், மேற்கு மண்டலத்தைப் பொறுத்தவரை வாகன தணிக்கை யில் ஈடுபடும் காவல் துறையினர் சீருடை அணிந்து வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது, என்றார்.