கரடு, முரடான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
நாமக்கல், ஜூலை 29- சேதமடைந்து கரடு, முர டாக காட்சியளிக்கும் சாலை யால் வாகன ஓட்டிகள் அவ திக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், குப்பாண் டபாளையம் ஊராட்சி, காந்தி நகர் முதல் வீதியில் அதிக ளவிலான அடுக்குமாடி குடி யிருப்புகள் உள்ளன. சுமார் 2 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலி ருந்து தினமும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி, பள்ளிக்கு செல்பவர்கள் அதிகளவில் உள்ளனர். இப்பகுதியில் உள்ள தார்ச்சாலை முற்றிலும் சேதமடைந்து, கரடு, முரடாக காட்சி யளிக்கிறது. இதனால் இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இச்சாலையில் தினமும் சென்று வருவதால், பலருக்கு முதுகு வலி உள்ளிட்ட பாதிப்பு கள் ஏற்பட்டு வருகிறது. மேலும், சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமுறும் நிலையும் தொடர்ந்து வருகிறது. யாருக் காவது உடல்நிலை மோசமானால், ஆம்புலன்ஸ் கூட இந்த சாலை வழியாக வர முடியாது. ஊராட்சி தலைவர்கள் பதவிக் காலம் முடிந்ததால், அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பல முறை புகாரளித்தும் பலனில்லை. இனியும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடு வோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.