tamilnadu

img

வேலை நிறுத்தத்திற்கு தள்ள வேண்டாம்: அ.சவுந்திரராசன் எச்சரிக்கை

வேலை நிறுத்தத்திற்கு தள்ள வேண்டாம்: அ.சவுந்திரராசன் எச்சரிக்கை

கோவை, செப்.26- அரசு போக்குவரத்து ஊழியர்க ளின் கோரிக்கைகளுக்கான இந்த காத் திருப்புப் போராட்டம் தொடரும், எங் களை வேலை நிறுத்த போராட்டத் திற்கு தள்ள வேண்டாம் என போக்குவ ரத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் அ.சவுந்திரராசன் எச்சரித்தார். பணி ஓய்வு பெறும் போதே தொழி லாளிக்கான பண பலன்களை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். கோவையில் 40 ஆவது நாளாக கோவை சுங்கம் பணிமனை முன்பு நடை பெற்று வரும் போராட்டத்தை வாழ்த்தி, சிஐடியு மாநிலத்தலைவரும், அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத் தலைவருமான அ.சவுந்திரராசன் உரை யாற்றினார். அப்போது அவர் பேசுகை யில், இதுவரை போக்குவரத்துத்துறை யில் நீண்ட நெடிய போராட்டம் நடந் தது இல்லை இது தான் முதல் முறை. அந்த அளவுக்கு அநீதி, கொடுமை அதி கரித்துள்ளது. இதற்கு மேல் தாங்க  முடியாது என்ற நிலைக்கு தொழிலா ளர்கள் வந்துவிட்டார்கள் எதையும் கூடுதலாக கேட்டு இந்த போராட்டம்  நடைபெறவில்லை. ஏற்கனவே தொழி லாளர்கள், ஓய்வூதியர்களுக்கான பணம் அரசிடம் உள்ளது. இவை 30 ஆண்டுகளாக தொழிலாளர்கள் சேமித்த பணம், அதை தர மறுக்கிறார்கள். பணி ஓய்வு பெறும் போதே தொழிலாளிக் கான பணப்பலன்களை வழங்க வேண் டும், ஆனால் 25 மாதங்களாக அரசு கொடுக்கவில்லை; அதனை கேட்டு தான் போராடுகிறோம்.  இவ்வாறு ரூ.45 லட்சத்தை இப் போது கொடுக்காமல் 25 மாதம் கழித்து கொடுத்தால் பணத்தின் மதிப்பு பாதி யாக குறைந்து விடுகிறது. அரசிடம் தொழிலாளர்கள் பணம் உள்ள நிலை யில், தொழிலாளர்கள் வெளியே கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இதே போல பணியில் உள்ளவர்களுக்கு வர வேண்டிய அரியர்ஸ் தொகை நிலுவை யில் உள்ளது. ஓய்வூதிய பஞ்சப்படியை நீதிமன்றம் உத்தரவிட்டும் வழங்க வில்லை. அரசு போக்குவரத்து துறை யில் அவுட்சோர்சிங் முறையை அரசு முன்னிருத்துகிறது. இது தவறானது. எந்தத் துறைக்கும் நடக்காத ஆநீதி போக்குவரத்து துறைக்கு மட்டுமே நடக்கிறது. அதேபோல் எங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் ரூ.15 ஆயிரம் கோடி அரசிடம் உள்ளது. மேலும் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை அந்தந்த நிறுவனங்களுக்கு கட்டி இருக்க வேண்டும். அவற்றை இவர்கள் கட்டவில்லை. இதன் காரண மாக கூட்டுறவு சங்கங்களில் கடன் கொடுப்பதில்லை. மிகப்பெரிய கொடு மையை தொழிலாளர்கள் சந்தித்து வரு கின்றனர். எனவே இந்த காத்திருப்பு போராட்டம் தொடரும். அடுத்த கட்ட மாக வேலை நிறுத்தத்திற்கு எங்களை தள்ள வேண்டாம், என்றார். முன்னதாக, இந்த போராட்டத்தில் சங்கத்தின் சம்மேளன துணை பொதுச் செயலாளர் எம்.கனகராஜ், மாவட்டச் செயலாளர் எம்.வேளாங்கண்ணி ராஜ், மாவட்டத் தலைவர் ஆர்.லட்சுமி நாராய ணன், ஓய்வு பெற்றோர் நல அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் எம்.அருண கிரிநாதன்,  சுரேந்திரன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.  திருப்பூர் இதேபோன்று, திருப்பூர்  - காங்கே யம் சாலை, அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு சிஐ டியு அரசு போக்குவரத்து ஊழியர்  சங்கம் மற்றும் ஓய்வுபெற்ற நல அமைப் பினர் தொடர் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நி லையில் அவர்களின் போராட்டம் 40  ஆவது நாளை எட்டியது. வெள்ளியன்று நியாயமான கோரிக்கைகளை உடன டியாக நிறைவேற்ற கோரியும், மெள னம் காக்கும் அரசுக்கு தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையி லும் 13 பேர் மொட்டை அடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவ ரத்து ஊழியர் சங்க சிஐடியு மண்டல உதவித்தலைவர் கே.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஆனந்தராஜ், சரவண மூர்த்தி, தேவர்கிருபாகரன், முத்துச் சாமி, செங்குட்டுவன், குப்புசாமி, பொன்னுச்சாமி, பொன்ராஜ், கிருஷ்ண சாமி, பழனிச்சாமி,  துரைசாமி, ஜான் பாலி, செல்வராஜ் ஆகியோர் மொட்டை யடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் சேலம் புதிய பேருந்து நிலையம் மெய்யனூர் போக்குவரத்து பணிமனை முன்பாக சிஐடியு போக்குவரத்துக் ஊழியர்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சார்பில் 40ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலத் தலைவர் கே.செம்பன் தலைமை வகித்தார். இதில் மண்டல  பொதுச்செயலாளர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் சேகர், அரசு விரைவு போக்குவரத்து சங்க மாநில  துணை பொதுச்செயலாளர் முருகே சன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் இளங்கோ, சிஐடியு ஓய்வு பெற்ற போக் குவரத்து சங்க ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்டு பலர் பங் கேற்றனர். ஈரோடு தொடர் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழி யர்களுக்கு ஆதரவாக ஈரோட்டில், சிஐ டியு, விச, விதொச, வாலிபர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மண்டல தலைமை அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க மண்டல பொதுச்  செயலாளர் டி.ஜான்சன் கென்னடி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், மாவட்டச் செயலாளர் கே.மாரப்பன், விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி. மாரிமுத்து, மாவட்டச் செயலாளர் ஏ. எம்.முனுசாமி, விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் கே.ஆர். விஜயராகவன், வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் உட் பட பெருந்திரளானோர் பங்கேற்றனர். நீலகிரி நீலகிரி மாவட்டம், கூடலூரில் சிஐ டியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கே.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எம்.ஆர்.சுரேஷ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் குஞ்சு முகமது, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.வாசு, வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் ராசி.ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண் டனர்.