வட்டக்கிளை பேரவை
கோவை, செப்.27- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோவை வடக்கு வட்ட கிளை 17 ஆவது பேரவை சனியன்று நடை பெற்றது. கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தாமஸ் கிளப்பில் தோழர். என்.பஞ்சலிங்கம் அரங்கத்தில் நடை பெற்ற வட்டக்கிளை பேரவைக்கு, தலைவர் ஆர்.ராம சாமி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சையது உசேன் துவக்கி வைத் தார். இதில், வேலை அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கையை செயலாளர் ஆர்.ரவி மற்றும் பொருளா ளர் எல்.வளர்மதி ஆகியோர் முன்மொழிந்தனர். இதில், கால்நடை உதவியாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் வே.ஜெயபால், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர். பிரகலதா, தமிழ் நாடு சத்துணவு மற்றும் அங்காடி ஓய்வூதியர் சங்க மாநி லத் தலைவர் கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் பேசி னர். இதில் தலைவராக ஆர்.ராமசாமி, செயலாளராக ஆர்.ரவி, பொருளாளராக எல்.வளர்மதி உள்ளிட்ட 14 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட் டது. மாவட்டப் பொருளாளர் ப.நடராஜன் நிறைவுரை யாற்றினார். இணைச்செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
