tamilnadu

img

பந்தலூருக்கு பேரிடர் மீட்புக்குழு வருகை

பந்தலூருக்கு பேரிடர் மீட்புக்குழு வருகை

உதகை, ஆக.29– பந்தலூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும்  மழை காரணமாக மீட்புப்  பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு உபகரணங்களு டன் தமிழக பேரிடர் மீட்புக்  குழுவினர் வருகை புரிந்த னர். கோவை, நீலகிரி, திருப் பூர் மாவட்டங்களில் மழை  பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறி வித்திருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட் டம் கூடலூர், பந்தலூர், தேவாலா மற்றும்  அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகி றது. நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் 14 சென்டிமீட்டர் மழையும், தேவா லாவில் 9 சென்டிமீட்டர் மழையும் பெய்துள் ளது. இதனால் சிறு சிறு ஆறுகள் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து குடியி ருப்பு பகுதிகளுக்கு வெள்ளப் பெருக்கானது ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதி களுக்கு செல்லக்கூடிய சாலைகள் மற்றும் பந்தலூர் நகர பகுதிகளில் மழை நீரானது சூழ்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் கடும்  சிரமத்திற்கு உள்ளாகினர்  இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்யும் என அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக பாதுகாப்பு உபகரணங்களுடன் தமிழக பேரிடர் மீட்புக்குழுவினர் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். குழுக்களாக பிரிந்து மீட்புப்பணி களை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ள னர்.