மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய மாநாடு
நாமக்கல், ஜூலை 6- மாற்றுத்திறனாளிகள் சங்க கொல் லிமலை ஒன்றிய மாநாட்டில் நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நாமக் கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியக் குழுவின் முதல் மாநாடு, செம்மேடு வல் வில் ஓரி கூட்டரங்கில் ஞாயிறன்று நடை பெற்றது. சங்கத்தின் நிர்வாகி ராஜேஸ் வரி தலைமை வகித்தார். கிளைத் தலைவர் சின்னகுட்டி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.ராஜேஷ் மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி. கண்ணன் வாழ்த்திப் பேசினார். இம் மாநாட்டில், குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டும், மாற்றுத்திறனா ளிகள் குடும்ப அட்டையை ஏஏஒய் அட்டையாக மாற்றி, மாதம் 35 கிலோ அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஜூலை 22 ஆம் தேதியன்று கொல்லிமலை வட்டாட்சி யரிடம் முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சங் கத்தின் ஒன்றியத் தலைவராக சந்திர சேகரன், துணைத்தலைவர்களாக ரமேஷ், தாமரைச்செல்வி, செயலாள ராக அமுதா, துணைச்செயலாளர்க ளாக ராஜேஸ்வரி செல்லப்பன், பொரு ளாராக சங்கர் உட்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்ட அமைப்பாளர் முருகே சன் நிறைவுரையாற்றினார். முடிவில், ராஜேந்திரன் நன்றி கூறினார்.