tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சங்க பாலக்கோடு மாநாடு

மாற்றுத்திறனாளிகள் சங்க பாலக்கோடு மாநாடு

தருமபுரி, ஜூலை 29- மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பாலக்கோடு வட்ட மாநாட்டில் நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்ட 4  ஆவது மாநாடு, திருமலை வாசன் திருமண மண்டபத்தில் திங்களன்று நடைபெற்றது. முன்னதாக, பாலக்கோடு பேருந்து நிலை யத்திலிருந்து 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் பேரணியாக, மாநாட்டு அரங் கத்தை சென்றடைந்தனர். வட்டத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். எம். பழனி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். மாநிலத் தலைவர் தோ.வில்சன் துவக்கவுரை யாற்றினார். வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ் அறிக்கையை முன்வைத்தார். சங் கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மாரி முத்து, தலைவர் ஜி.கரூரான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், ஆந்திராவைப் போல் தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண் டும். விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திற னாளிகளுக்கும் உடனடியாக ஏஏஒய் குடும்ப அட்டை வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொ டர்ந்து, சங்கத்தின் வட்டத் தலைவராக எம். அண்ணாமலை, செயலாளராக ஜி.மாதே சன், பொருளாளராக வி.விஜயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலப் பொரு ளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி நிறைவுரை யாற்றினார்.