மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களுக்கு சட்டப்படி கூலி வழங்கக் கோரிக்கை
திருப்பூர், ஆக.28- திருப்பூர் மாநகராட்சியில் தூய் மைப் பணியாளர், குடிநீர் பணியாளர், ஓட்டுநர்கள் மற்றும் டிபிசி ஊழியர்கள் என ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வோருக்கு சட்டப்படி கூலி வழங்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐ டியு) மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ் மாநகராட்சி ஆணையாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர், குடிநீர் பணியாளர், ஓட்டுநர் கள் மற்றும் டிபிசி ஊழியர்கள் என, 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்க ளில், கடந்த 2012இல் திருப்பூர் மாநக ராட்சியோடு ஒருங்கிணைக்கப்பட்ட பகு திகளின் ஊழியர்கள், மற்றும் அவுட் சோர்சிங் ஒப்பந்த ஊழியர்களே மிகப் பெரும்பான்மையாக உள்ளனர். மேற் கண்ட ஊழியர்களின் சட்டபூர்வமான ஊதியங்கள், இதர கோரிக்கைகள் தொடர்ந்து வழங்கப்படாமல் உள் ளது. குறிப்பாக, 2012 இல் மாநகராட்சி ஊழியர்களாக அறிவிக்கப்பட்ட ஒருங் கிணைந்த பகுதிகளின் 184 குடிநீர் பணி யாளர்கள், 34 தூய்மை பணியாளர்கள், 5 ஓட்டுநர்கள் என, 223 பேரில், தற்போது 100க்கும் குறைவான ஊழியர்களே உள்ளனர். மேற்கண்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகி றது. எனவே பணி நிரந்தரம் செய்ய விரை வில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் தூய்மைப் பணியி லும், குடிநீர் பணியிலும் உள்ள எஸ்.ட பிள்யூ.எம்.எஸ் (SWMS) உள்ளிட்ட அவுட்சோர்சிங் நிறுவனங்கள் குறைந்த ஊதியங்களே அந்த ஊழியர்களுக்கு வழங்குவதுடன், இபிஎஃப் (EPF) மற்றும் இஎஸ்ஐ (ESI) தொகைகளை முறையாக செலுத்துவதில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து, ஊதிய உயர்வும், இபிஎப் மற்றும் ஈஎஸ்ஐ பிடித்தங்கள் முறையாக செலுத்துவ தையும், தீபாவளிக்கு சட்டப்படியான போனஸ் வழங்குவதையும் உறுதிப்ப டுத்த வேண்டும். கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு டிபிசி (DBC) தின சரி ஊதியமாக ரூ.355 மட்டுமே வழங்கப் படுகிறது. இதரப் பகுதிகளில் வழங் கும் ஊதியத்தை விட இது மிகவும் குறைவான ஊதியமாகும். அதுவும் கால தாமதமாகவே வழங்கப்படுகிறது. எனவே டிபிசி ஊழியர்களுக்கு ஊதி யம் உயர்த்தி வழங்குவதுடன், மாத மாதம் 5 தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.