tamilnadu

img

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை

உதகை, ஆக.10- சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என  சிஐடியு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு லோடிங் மற்றும் அன்லோடிங் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியனின் நீலகிரி  மாவட்ட பேரவைக் கூட்டம், ஞாயிறன்று சிபிஎம்  மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற் றது. சங்கத்தின் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். நிர்வாகி அசேன் வரவேற்றார். நிர்வாகி பெரியார் மணிகண்டன் அஞ்சலி  தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட் டப் பொருளாளர் நவீன் சந்திரன் துவக்கவு ரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் கே. ராஜன் அறிக்கையை முன்வைத்தார். இக்கூட் டத்தில், வனவிலங்குகள் நடமாடும் பகுதியி லுள்ள குன்னூர் டாஸ்மாக் குடோனை, உதகை நகரத்திற்கு மாற்ற வேண்டும். டாஸ் மாக் குடோன் தொழிலாளர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் செய்து தர வேண் டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். நலவாரிய அலு வலகங்கள் தாலுகா அளவில் அமைக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத் தின் தலைவராக ரமேஷ், செயலாளராக கே. ராஜன், பொருளாளராக பெரியார் மணிகண் டன் உட்பட 13 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய் யப்பட்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. வினோத் நிறைவுரையாற்றினார். முடிவில், லட்சுமணன் நன்றி கூறினார்.