tamilnadu

img

அணை கால்வாயில் இறந்து மிதந்த மீன்கள்

அணை கால்வாயில் இறந்து மிதந்த மீன்கள்

சேலம், ஜூலை 16- மேட்டூர் அணையின் உபரிநீர் கால்வா யில் மீன்கள் இறந்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து 2 வார காலமாக உபரிநீர் போக்கி வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் இரு தினங்களுக்கு முன்பு நிறுத் தப்பட்டது. இதன் காரணமாக தங்கமாபுரிப் பட்டணம், சின்னக்காவூர், சேலம் கேம்ப்  பகுதிகளில் ஆங்காங்கே குட்டைகளில் தேங் கிய நீரில் கட்லா, ரோகு, கெளுத்தி, கெண்டை, ஜிலேபி, அரஞ்சான் உள்ளிட்ட மீன்கள் உள்ளன. இந்நிலையில், செவ்வா யன்று திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. அரஞ்சான், திலேபி உள்ளிட்ட பலவகையான மீன்கள் இறந்து மிதப்பதால் கரையோர குடியிருப்புப் பகுதி களில் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீர் மாசு  காரணமாக மீன்கள் இறந்தனவா? அல்லது  வெப்பம் காரணமாக ஆக்சிஜன் பற்றாக் குறையால் இறந்தனவா? என்பது குறித்து மீன்வளத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் நடைபெற்ற 14 வயதிற்குட்பட்ட போட்டியில் வெற்றிபெற்று, புதனன்று சொந்த ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர்களுக்கு சேலம் ரயில் நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.