மாணவர்களின் ஆபத்தான பேருந்து பயணம்
கோவை, செப்.9- இருகூர் அருகே மினி பேருந்தில் மாண வர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைர லாகி வருகிறது. கோவை, இருகூர் – ஏ.ஜி.புதூர் சாலை யில் தங்கம் என்ற மினி பேருந்து தினமும் காலை 8 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் தினமும் பயணிகள் அதிக நெரி சலுடன் படிக்கட்டில் தொங்கியபடியே பய ணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலை யில் செவ்வாயன்று காலை வழக்கம் போல அந்தப் மினி பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர். அதில் ஒருவரது கால் சாலையில் உரசிய படி சென்றது. இதனை பேருந்தின் பின்னால் சென்ற நபர் தனது செல்போனில் பதிவு செய்தார். அந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வைராகி வரு கிறது. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர், பணி நிமித்தமாக கோவை மாநகரத்தை நோக்கி வருகின்றனர். ஆனால், அதற்கு ஏற்றாற் போல பேருந்து வசதியில்லாததால், வேறு வழியின்றி கிடைக்கும் பேருந்துகளில், அடைத்துக்கொண்டு செல்கின்றனர். இதன் காரணமாக பல்வேறு விபத்துகளும் ஏற்ப டுகிறது. இதற்கு நிரந்திர தீர்வாக பொதுப் போக்குவரத்தை பலப்படுத்தினால் மட்டுமே சாத்தியமாகும். மாவட்ட நிர்வாகம் இதுகு றித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.