tamilnadu

img

அனுமதியின்றி மரங்கள் வெட்டி விற்பனை

அனுமதியின்றி மரங்கள் வெட்டி விற்பனை

தருமபுரி, ஆக.24- பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்த மரங்கள், அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் 10  ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதா னம் உள்ளது. இதில் சுற்றுச்சுவரை ஒட்டி உள் புறமாக நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் உள் ளன. பசுமை ஆர்வலர்கள், அரசு அதிகாரி கள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாண வர்கள் மரக்கன்று நட்டு, பல ஆண்டுகளாக  வளர்த்து வந்தனர். வளர்ந்து விழுதுகள் பாய்ச் சிய ஆலமரங்கள், வைரம் பாய்ந்த தேக்கு  மரங்கள், வேம்பு, வாகை, புங்கன், அத்தி, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகை மரங்கள்  நிழல் பரப்பி பூங்காவைப் போல் பசுமையாக காட்சியளிக்கிறது. இதில் அதிகாலை நேரத் தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பள்ளி மைதானத்தில் இளைஞர்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செய்வதும், மூத்த குடி மக்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் நடைபயிற்சி மேற் கொண்டும் வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று பள்ளி மைதானத்தில் நன்றாக வளர்ந்த பச்சை மரங் கள் அடியோடு வெட்டப்பட்டு வெளியே எடுத் துச் செல்லப்பட்டுள்ளது. மர அறுவை இயந்தி ரங்கள் மூலம் மரம் அறுக்கப்பட்டுள்ளது. மரத்தின் அடிப்பாகம் வெளியே யாருக்கும்  கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இலை தழைகளை போட்டு மூடிமறைக்கப்பட்டுள்ளது. வெட்டப் பட்ட மரத்தின் அடிப்பகுதி செம்மண் பூசியும் மறைக்கப்பட்டுள்ளது. சில மரங்கள் அடி யோடும் சில மரங்களில் பருத்த கிளைக ளும் வெட்டப்பட்டுள்ளது. பள்ளி வளாகத் தில் நடப்பட்டு நன்கு வளர்ந்த பச்சை மரங் கள் அடியோடு வெட்டப்பட்டிருப்பதைக் கண்ட நடை பயிற்சிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந் தனர். பசுமை தீர்ப்பாய அனுமதி பெறாமல், மரங்களை வெட்டியிருப்பதும் டெண் டர் நடைமுறைகளை பின்பற்றாமல் டன்  கணக்கான எடையுள்ள பத்துக்கும் மேற்பட்ட  மரங்களை வெட்டி விற்பனை செய்தது முறை கேடாகும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, முறைகேடு நடை பெற உடந்தையாக இருந்த பள்ளி நிர்வா கத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்ட தற்கு, பள்ளி வளாகத்தில் உயிரோடு இருக் கும் மரங்கள் எதுவும் வெட்டப்படவில்லை. முற்றிலும் காய்ந்து கிடந்த ஒரு மரத்தையும் முறிந்து விழுந்த ஒரு மரக்கிளையை மட்டுமே வெட்டி அகற்றியதாக தெரிவித் தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஷாலினி தமிழ்ச்செல்வனிடம் கேட்டதற்கு, மரங்களை வெட்டி அகற்றுவது குறித்து  பள்ளி மேலாண்மைக்குழுவில் விவாதிக் கப்படவில்லை. மரங்கள் வெட்டப்பட்டது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்துவேன், என்றார். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறுகையில், பள்ளி வளாகத்தில் பல ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள மரங்களை அனுமதி யின்றி வெட்டியது மட்டுமல்லாமல், முறை கேடாக விற்பனை செய்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என் றார்.