tamilnadu

img

வணிக வரித்துறையின் நெருக்கடி: தொழிற்துறையினர் கொதிப்பு

வணிக வரித்துறையின் நெருக்கடி: தொழிற்துறையினர் கொதிப்பு

கோவை, ஆக.22– தொழில்முனைவோர்களை, வணிக வரித் துறை அதிகாரிகள் திருடர்கள் போல நடத்துவதாகக் குற்றம்சாட்டி, கோவை தொழில் அமைப்பு கூட்டமைப்பினர் மாநில வணிக வரித்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். தமிழ்நாடு மாநில வணிக வரித் துறை மூலம் ஏற்படும் நெருக்கடி களை களைய நடவடிக்கை எடுக் கக்கோரி கோவை தொழில் அமைப் புகளின் கூட்டமைப்பினர் மாநில வணிக வரித்துறை இணை ஆணை யர் தாக்ரே சிவம் ஞானராவ்-யை  வெள்ளியன்று சந்தித்து மனு அளித் தனர். இதன்பின் கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகை யில், கோவை மாவட்டத்தில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் உள்ளோம்.  இந்நி லையில், கடந்த 2017 முதல் 2022  வரை ஜி.எஸ்.டி -யில் பல்வேறு கார ணங்களை கூறி போர்டலில் வரித் தொகையை பதிவேற்றம் செய்துள் ளனர். ஆனால் இதனை தொழில் முனைவோர்கள் கவனிக்க தவறி விடுகிறார்கள். இதை காரணம் காட்டி பல லட்சங்களில் அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான நோட்டீஸ் கள் வழங்கப்பட்டு வருகிறது. இத னால் கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, நெருக்கடி களை சந்தித்து வருகிறோம்.  எங் கள் கூட்டமைப்பில் உள்ள 23  தொழில் அமைப்புகளுக்கு வந்த  தொடர் புகாரை தொடர்ந்து கோவை யில் உள்ள வணிக வரித்துறை இணை ஆணையர் மூலம் தமிழக  வணிக வரித்துறை ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம்.  குறிப்பாக, 2017 இல் ஜி.எஸ்.டி  துவக்க காலத்தில் என்ன பிரச்சனை கள் உள்ளது என்று அதிகாரிக ளுக்கு தெரியாத சூழலில் இருந் தது. அப்போது பல புதிய விதிகள் கொண்டு வரப்பட்டு செம்மைப் படுத்தினர். 2019 இல் கொரோனா  பெருந்தொற்று, ஜி.எஸ்.டி அமலாக் கத்தால் தொழில்துறை முடக்கம் என பல்வேறு நெருக்கடிகளை சந் தித்த நேரத்தில் போடப்பட்ட அபரா தத்திற்கு வட்டி மேல் வட்டி போட்டு  கேட்கிறார்கள்,  நோட்டீஸ் வழங்கு கிறார்கள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.  அதேபோல வணிகவரித்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள் ஆங் காங்கே நின்று, உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக தொழில்துறையினர் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரிபார்க்கும் போது, அதில் வரும் சிறு பிழைகளுக்கு கூட ரூ.5 ஆயி ரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபரா தம் விதிக்கின்றனர். மேலும் அதிகா ரிகள் தொழில் முனைவோரை திரு டர்கள் போல பார்க்கிறார்கள், அதேபோல் சிறு பிழைகளுக்காக வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டு சரக்கு கட்டணத்தை விட  மூன்று மடங்கு அபராதம் விதிக்கின் றனர்.  இதனை தொழில் துறையினர் மேல்முறையீடு செய்து ஓராண்டு கழித்து திரும்ப பெற வேண்டிய சூழல் உள்ளது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல தொழில் முனைவோர்களை அழைத்து ஒவ்வொரு மாதமும் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தி, குறைகளை கேட்டு அறிகிறோம் என  தெரிவித்துள்ளனர்.  உடனடி யாக தொழில் துறையினருக்கு நெருக்கடி கொடுக்கும் இந்த நட வடிக்கைகளை வணிகவரித்துறை அதிகாரிகள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். முன்னதாக இந்த மனு அளிக் கையில், போசியா ஒருங்கிணைப் பாளர்கள் ஜேம்ஸ், ரவீந்திரன், டான் சியாவின் துணைத்தலைவர் சுருளி வேல், கூட்டமைப்பிலுள்ள தொழில் அமைப்புகளின் தலைவர்கள் சுரேஷ், ஜெயகுமார், பாலசந்திரன், சுரேந்திரன், செல்வகணபதி, தி. மணி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.