காதில் பூ சுற்றி சிபிஎம் நூதன ஆர்ப்பாட்டம்
சேலம், செப்.27- ஆத்தூரில் குடிமனை பட்டா, நிலப்பட்டா கேட்டும் கீழ் தொம்பை பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்லும் பாதையை மீட்டுத்தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் காதில் பூ சுத்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, கீழ் தொம்பை, பைத்தூர், கல்லுகட்டு, காந்திபுரம், பூமரத்து பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அனுபவித்து வரும் நிலத்திற்கு அனுபவ பட் டாவை வழங்கிட வேண்டும். முல் லைவாடி, ராமமூர்த்தி நகர், மாரி முத்துநகர், தலைவாசல், புத்தூர், புளியங்குறிச்சி, கல்லு கட்டு பகுதி யில் குடியிருந்து வரும் வீட்டிற்கு குடிமனை பட்டாவை வழங்கிட வேண்டும். கீழ் தொம்பை பகுதி யில் உள்ள மயானத்திற்கு நூறாண் டுகளுக்கு மேலாக ஆதிதிராவிட நலத்துறை வாங்கி கொடுத்த பாதையை தனி நபர்கள் மறித்துள் ளனர். மயானப் பாதையை மீட்டு கொடுக்க வலியுறுத்தி கடந்த 26-6-25 ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இதனையடுத்து, அதிகாரிகள் கோரிக்கைகள் நிறைவேற்று வோம் என உறுதியளித்தனர். ஆனால், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலை யில், வெள்ளியன்று கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காதில் பூ சுத்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சிபிஎம் தாலுகா செயலா ளர் எ.முருகேசன் தலைமை வகித் தார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் கண்டன உரையாற்றினார். தாலுகா குழு உறுப்பினர்கள் சி.மாரிமுத்து, ஆர். வெங்கடாஜலம், எஸ்.பிரபு, தங்கம் மாள், வி.சத்யா. எ.முருகேசன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக அதிகாரிகளுடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 2.10.25 தேதிக்குள் மயான பாதை ஆக்கிரமிப்பு அகற் றப்படும் என்றும், குடிமனை பட்டா, நிலப்பட்டா விசாரனை செய்து இன் னும் சில நாட்கள் பட்டாகள் கொடுக் கபடும் என உறுதியளித்தார். மேற் கண்ட கோரிக்கை நிறைவேற்ற வில்லை என்றால், அக்டோபர் மாதத்தில் கோட்டாட்சியர் அலுவ லகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப் பட்டது.
