சிபிஎம் தாலுகா அலுவலக இடத்திற்கான பத்திரம் ஒப்படைப்பு
பொள்ளாச்சி, செப்.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் மறைந்த சீத்தா ராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில் நினைவேந்தல் மற்றும் உடல் உறுப்பு தான நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிபிஎம் பொள்ளாச்சி தாலுகா குழுவின் புதிய அலுவலகத்திற் காக வாங்கப்பட்ட இடத்தின் பத்தி ரத்திரம் சிபிஎம் மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட் டது. பொள்ளாச்சியில் உள்ள வங்கி ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நடை பெற்ற இந்த நிகழ்வுக்கு, தாலுகா குழு உறுப்பினர் கே.மகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழ னிசாமி மற்றும் தாலுகா செயலா ளர் மூ.அன்பரசன் உட்பட 27 பேர், உடல் உறுப்பு தானம் செய்வதற் கான விருப்பப் படிவங்களை வழங் கினர். மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் சிறப்புரையாற்றினார். இந்த நினைவேந்தல் நிகழ் வில், சிபிஎம்-ன் பொள்ளாச்சி தாலுகா குழு அலுவலகத்திற்காக பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவில் 3 சென்ட் நிலம் வாங்கப் பட்டது. கட்சியின் உறுப்பினர்க ளின் பங்களிப்பில் கிரையம் செய் யப்பட்ட இந்த இடத்திற்கான பத் திரத்தை, ஆச்சிபட்டி கிளையைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் லோக நாதன், மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபனிடம் வழங்கினார். முடிவில், தாலுகா குழு உறுப்பி னர் ஸ்டாலின் பழனிசாமி நன்றி தெரி வித்தார். இதில் ஏராளமானோர் பங் கேற்றனர்.