சிபிஎம் அலுவலக நன்கொடை வழங்கல்
தஞ்சாவூர், ஆக. 31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பட்டுக்கோட்டை ஒன்றியக் குழு அலுவலக கட்டிட நிதியாக, வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் மணிமுத்து, ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக, பட்டுக்கோட்டை சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமியிடம் வழங்கினார். அப்போது மூத்த தோழர் மெரினா பூ.ஆறுமுகம், அண்ணா குடியிருப்பு கிளைச் செயலாளர் தமிழ் அய்யா, ஒன்றியக் குழு உறுப்பினர் மோரிஸ் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
